வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதிசெய்ய, புதிய சட்டம் வருகிறது
வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்ரம கொழும்பு ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
தரம் குறைந்த பண்டங்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதனை அதாவது இறக்குமதி செய்யப்படுவதனை தடுக்க இலங்கையில் தற்போதைக்கு போதிய சட்ட ஒழுங்குகள் கிடையாது.
தற்போது நாட்டில் அமுலில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தில் தரம் குறைந்த பண்ட இறக்குமதியை கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகள் கிடையாது.
எனவே இந்த சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது.
புதிய சட்டம் அறிமகம் செய்யப்பட்டதன் பின்னர் தரம் குறைந்த பொருட்களை நாட்டுக்கள் இறக்குமதி செய்வது கட்படுத்தப்பட உள்ளது.
சில குறைந்த விலையில் பொருள் இறக்குமதியினால் உள்நாட்டு உற்பத்தியாளருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பினை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்ட உள்ளது.
உலகின் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தரம் குறைந்த பொருட்கள் இலங்கையை இலகுவில் வந்தடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதுடன் நின்று விடாது, பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்ய இலங்கை தர நிர்ணயசபை, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், மருந்துப் பொருள் ஆய்வு நிறுவனம் ஆகியனவற்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பண்டத்தின் தரம் பற்றி பகுப்பாய்வு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Tharamaana porutkalaip paavippazatku tharamaana manizargalayum
ReplyDeleteirakkumazi seyyavendivarum !
Bribery endru ondru irukkum varai ithu saaththiyamaakathu.
ReplyDelete