Header Ads



வடமாகாண முதலமைச்சரின் இனவாதம் - ஓமல்பே சோபித தேரர் கண்டனம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தினமும் மூன்று வேளைகள்  இராணுவத்தினரை வணங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது மாத்திரமன்றி,  அவர் தற்போது முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பதற்கும் இராணுவத்தினரே காரணம் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியிருக்காவிட்டால் இவை எதுவும் நிகழ்ந்திருக்காது என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இராணுவத்தினரை வடமாகாணத்திலிலுள்ள அழுக்குநீர் வடிகாண்களை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் என தெரிவித்திருப்பது வடமாகாண சபை முதலமைச்சரின்  இனவாதப் போக்கையே வெளிக்காட்டுவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தடித்த சாதிவெறி நிலவும் இந்துக் கலாசாரத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களையே அழுக்குநீர் வடிகாண்களை சுத்தப்படுத்துவற்கு ஈடுபடுத்துவார்கள்.

எனவே வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இந்த கருத்து இராணுவத்தினருக்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்காகும் என கூறிய அவர் பாரிய அவமானமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் நன்னோக்கில் கூறவில்லை என சுட்டிக்காட்டியள்ளார். 

இதேவேளை இராணுவத்தினரை அவமானப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.