Header Ads



பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முன், சவால் விடுத்த ரிசாத் பதியுதீன்

வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்.

ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முன்னையிலையில் இந்த சவாலை ரிசாத் பதியுதீன் மிக ஆக்ரோசமாக விடுத்தார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சபையில் மிக ஆக்ரோசமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க பாரிய குறிக்கீடுகளையும் மேற்கொண்டார்.
விமலின் அந்த குறுக்கீடுகளுக்கெல்லாம் பதிலளித்து அமைச்சர் தனது உரையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

மகாவலி,சுற்றாடல்,நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சூழலியாளர்கள் எனக் கூறிக் கொள்வோர் இன்று வில்பத்து விடயத்தில் முஸ்லிம்கள் மீது அநியாயமான அபாண்டங்களை சுமக்கின்றனர். உண்மையில் அப்படிப்பட்டோர். உண்மையான சூழலியலாளர்களாக நான் பார்க்கவில்லை.

மதவாதிகள் இனவாதிகள் போன்று இந்த சூழலியலாளர்களும் இனவாதவாத கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதியளிக்கப்பபோவதில்லை.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வனவளத்தினால் எல்லையிடப்பட்டுள்ளது..6 ஆயிரத்துக்கும் அதிமான ஹெக்டயர் காணி வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. மறிச்சுக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்கள் வனவளத்தினால் எல்லையிடப்பட்டுள்ளது. இந்த காணிகள் முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகளாகும்.

இதில் பாடசாலைகள்,வர்த்தக நிலையங்கள் என்பன காணப்படுகின்றன.இந்த காணியினை 2012 ஆம் ஆண்டு வனவளத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டது.

இனவாதிகளும், மதவாதிகளும் முஸ்லிம்களும், நானும் வில்பத்து காணிகளை பிடிப்பதாக கூக்குரலிடுகின்றனர். வில்பத்து காணியில் ஒரு அங்குளத்தையேனும்,நனோ,எனது மக்களோ பிடிக்கவில்லை என்பதை உறுதியாக இந்த சபையில் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்..

எமது சமூகம் தொடர்பில் பிழையான கருத்துக்களை ஊடகங்கள் சில முன்னெடுக்கின்றன.சில சூழலியளாலர்கள் என்று கூறுபவர்கள் யார் என்பதை நாம் அறிவோம், இனவாதிகளினதும்,சர்வதேச நிதி நிறுவனங்களினதும் தரககர்களாக செயற்படுபவர்ளே இந்த அநியாயத்தை செய்கின்றனர்.
இந்த சபையில் உள்ளவர்களிடத்தில் சவால் விடுகின்றேன்.அவ்வாறு நானோ ,எனது சமூகமோ வில்பத்துக்குள் காணிகளை பிடிப்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால்விடுப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றும் போது மேலும் கூறினார்.

2 comments:

  1. Well done mr.rishard.you are aggressively debating here . Some others avgressivly dancing in American music shows.

    ReplyDelete
  2. ரிசாத் கூறிய விடயம் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியுமாகிலும் அவரைப்பற்றி அளவுக்குமீறி புகழ்ந்து 'ஆக்ரோசமாக' என்று கூறுவது கொஞ்சம் ஓவரா தெரிகின்றது. இப்படித்தான் ஒருமுறை ராஜபக்சவுடன் கடும் வாக்குவாதம் செய்தார் என்று செய்தித்தளங்களில் வந்தவுடன் ரிசாத் அமைச்சருக்கு நாமல் ராயபக்ச தொடக்கம் விமல் வீரவன்சவரைக்கும் போட்டுத்தாக்கினார்கள் (வார்த்தைகளால்) அதன்பின்னர் அத்தகைய செய்திகள் வேண்டுமென்றே தனது எதிராளிகளால் தன்னுடைய அரசியல் பயணத்தை தடுப்பதற்காக புனையப்பட்டவை என்று கூறி மன்னிப்பும் கேட்டு இருந்தார்.
    யனாதிபதி மைத்திரி இவ்வாறான வெட்டிப்பந்தாவைப்பற்றி கவலைப்படுபவர் இல்லையாயினும் இவ்வாறான செய்திகள் வருவது காலப்போக்கில் ரிசாத்திற்க்கே ஆபத்தாக அமையும்.
    மைத்திரிபால அவர்கள் மகிந்தவை எதிர்த்து போட்டியிட வந்தபோதிலே முதன்முதலாக முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவராக ஆதரவு தெரிவித்தவர் என்றவகையில் ரிசாத்திடம் துணிவு கொஞ்சம் இருந்தாலும் அதுவரைக்கும் மகிந்தவிற்கு விசுவாசமாக இருந்தபோதில் மகிந்தவிற்கு முன்னாள் உயர்ந்த தொனியில் பேசியதே கிடையாது. ஆனால், நல்லாட்சி வந்தவுடன் இப்படி ஆக்ரோசமாக சீறினார் பாய்ந்தார் கர்ச்சித்தார் என்றெல்லாம் செய்திகள் பரவுவதை பார்த்தால் சிரிப்பாகவே இருக்கின்றது. உண்மையில் அவரது பேச்சு ஒரு அறிவிப்பாகவும் அதற்க்கான நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுதலாகவும் இருந்தது. அதனையடுத்தே யனாதிபதி அவர்களும் அதற்க்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இங்கு இருவருமே சாதாரணமாக கோரிக்கை விடுத்தனர். அதைவிட்டிட்டு தமிழ்த்தேசிய ஆதரவாளர்களின் தளத்திலே மைத்திரிபால சீற்றம். அரசியல்வாதியின் பின்புலத்திலே காடழிப்பு இடம்பெற்றதாக கடுந்தொனியில் சுட்டிக்காட்டினார் என்று புசத்துவதும் முஸ்லிம்களின் தளங்களில் ரிசாத் ஆக்ரோசமாக யனாதிபதியின் முன்னிலையில் சீற்றம் என்று வருவதும் ஏதோவொரு அரசியல் லாபம் கருதிய பதிவாகவே தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.