Header Ads



முஸ்லிம் மாண­வர்­கள் அச்சப்படுகிறார்கள், மாணவிகள் மகிழ்ச்சி இல்லை என்கிறார்கள் - பேராசிரியர் சரத்

-Fareel-

முஸ்லிம் சமூ­கத்தில் பெண்கள் தனி­மைப்­ப­டுத்தி வேறு­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது. முஸ்லிம் பெண்­க­ளுக்கு சம உரிமை வழங்­கப்­பட வேண்டும். முஸ்லிம் பெண்கள் வீடு­களில் சமை­ய­ல­றைக்கும், வேலை­க­ளுக்கும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது தவிர்க்­கப்­பட வேண்டும் என கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிங்­க­ள­மொழி பிரி­வுத்­த­லைவர் பேரா­சி­ரியர் சரத் விஜே­சூ­ரிய தெரி­வித்தார்.

கொழும்பு விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் புதன் கிழமை மாலை நடைபெற்ற ­மர்ஹூம் நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்­து­கொண்டு சிறப்­புரை நிகழ்த்­து­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

தேசிய ஐக்­கி­யத்­துக்­கான நல்­லி­ணக்கம் ஒவ்வோர் குடும்­பத்­தி­னதும் குடும்ப உற­வு­க­ளி­லி­ருந்தே ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். முதலில் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளி­டையே நல்­லி­ணக்­கமும், புரிந்­து­ணர்வும் ஏற்­ப­ட­வேண்டும். முஸ்லிம் கண­வர்கள் தமது மனை­வி­யர்­க­ளுக்­கி­டையில் நெகிழ்வுத் தன்­மையை கையாள வேண்டும்.

நாம் சமயம், சாதி என்ற வேறு­பாட்­டுக்குள் இருந்து கொண்டு அதன் பின்பு நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை பற்றி பேசு­கிறோம். நாம் இனம், மத வேறு­பா­டு­க­ளுக்குள் இருந்து கொண்டு நல்­லி­ணக்கம் பற்றி பேச முடி­யாது. நல்­லி­ணக்­கமும், தேசிய ஐக்­கி­யமும் இன மத வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் உரு­வாக வேண்டும்.

சமயத் தலை­வர்கள் சமூ­கத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவர்கள் தாம் கௌர­வப்­ப­டுத்­தப்­படும் வகையில் தமது வாழ்க்­கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்­க­ளது செயல்கள் அனை­வ­ரையும் அணைத்துச் செல்­வ­தாக இருக்க வேண்டும்.

காலஞ் சென்ற சோபித தேரர் சமய வேறு­பா­டு­களை மறந்து மனி­தத்­து­வத்­துக்­காக உழைத்தார். அனைத்து மதங்­க­ளையும், மக்­க­ளையும் வேறு­ப­டுத்தி நோக்­க­வில்லை. இத­னா­லேயே முஸ்­லிம்கள் அவ­ருக்கு ஆர்வத்துடன் அஞ்­சலி செலுத்­தி­னார்கள்.

நான் அண்­மையில் பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மாண­வர்­களை அழைத்து கலந்­து­ரை­யா­டினேன். அவர்கள் மிகவும் பீதி­யு­டனே என்­னுடன் கதைத்­தார்கள். குறிப்­பாக மாண­வர்­க­ளிடம் ஒரு அச்ச உணர்வை என்னால் அறிந்து கொள்ள முடிந்­தது.

10 முஸ்லிம் மாண­வர்­க­ளையும் 10 முஸ்லிம் மாண­வி­க­ளையும் அழைத்து பேசினேன். அவர்­க­ளது எதிர்­கால இலட்­சியம் என்­ன­வென்று வின­வினேன். இவர்­களில் 2 மாண­வர்­க­ளையும், ஒரு மாண­வி­யையும் தவிர ஏனைய 17 பேரும் படித்து முடித்து பட்டம் பெற்­றதன் பின்பு இலங்­கையில் வாழ­ வி­ரும்­ப­வில்லை என்றும் ஐரோப்­பிய நாடொன்­றுக்குச் சென்று வாழ­வி­ரும்­பு­வ­தா­கவும் என்­னிடம் தெரி­வித்­தார்கள்.

எமது பல்­க­லைக்­க­ழக காலத்தின் போது நாம் இவ்­வாறு சிந்­திக்­க­வில்லை. நாட்டை விட்டுச் சென்று ஐரோப்­பிய நாட்டில் வாழ வேண்டும் என விரும்­ப­வில்லை. முஸ்லிம் மாண­விகள் தமக்கு வாழ்க்­கையில் சுதந்­திரம் இல்லை. மகிழ்ச்­சி­யில்லை என்று தெரி­வித்­தார்கள்.  அதி­க­மாக பெண்கள் சுதந்­தி­ரத்­தையும், மகிழ்ச்­சி­யையும் விரும்­பு­கி­றார்கள். முஸ்லிம் சமூ­கத்தில் பெண்­க­ளுக்கு சுதந்­தி­ரமும், மகிழ்ச்­சியும் இல்­லா­மை­யையே இந்த மாணவிகளின் கூற்று உறுதி செய்­கி­றது.

முஸ்லிம் மாண­விகள் தமது பெற்­றோரின் வாழ்க்­கையைக் கூறி மனம் வருந்­தி­னார்கள். எமக்கு அனைத்தும் இருந்­தது. செல்வம், சொத்து, பணம் மற்றும் வச­திகள் இருந்­தன. ஆனால் மகிழ்ச்சி இருக்­க­வில்லை. தாயார் சிறை­போன்ற வாழ்க்கை வாழ்­கிறார். வேலைக்­கா­ரி­யாக வாழ்­கிறார் என்று தெரி­வித்­தார்கள்.

நளீம் ஹாஜியார் தனது சமூகம் கல்வித் துறையில் முன்­னேற வேண்டும் என்ற உய­ரிய இலட்­சி­யத்­துடன் நளீ­மியா கல்­லூ­ரியை ஆரம்­பித்தார். இதற்­காக தனது செல்­வத்தைச் செல­வ­ழித்தார். இந்­நாட்டில் நளீம் ஹாஜியார் போன்­ற­வர்கள் உரு­வாக வேண்டும். அவர் அனைத்து இனங்­க­ளுக்கும் தேவை­யான ஒருவர். அவர் ஓர் தேசி­யத்­த­லைவர்.

மனி­தர்­க­ளாகப் பிறந்­து­விட்ட நாம் அடுத்­த­வர்­க­ளுக்கு எம்­மா­லான உத­வி­களைச் செய்ய வேண்டும். எரியும் ஒரு தீபத்­தினால் நூற்­றுக்­க­ணக்­கான தீபங்­களை ஏற்­றலாம். அந்த தீபம் அணைந்து விடு­வ­தில்லை. மேலும் பிர­கா­சிக்­கவே செய்யும்.

பேதங்­களை மறந்து ஒன்­று­ப­டுவோம். நாம் அனை­வரும் பேதங்­களை மறந்து ஒன்­று­பட வேண்டும். நாம் வேறு­பட்டு இருந்தால் ஆபத்­துக்­களை விரைவில் தேடிக்கொள்ள நேரிடும். நாட்டின் தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு அவசியமாகும்.

சமயத் தலைவர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அவர்கள் தமது நலன்களையும், மாளிகைகளையும் பார்த்துக் கொண்டிருந்தால் மக்களை நல்வழிப்படுத்த முடியாது. நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தையும் உருவாக்க முடியாமற் போகும் என்றார்.

இந் நிகழ்வில் ஜாமிஆ நளீமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியும் உரையாற்றினார். அத்துடன் நளீமியா பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி), ராபிதா நளீமிய்யா உறுப்பினரும் உயர் கல்வி அமைச்சின் உதவிப் பணிப்பாளருமான வை.எல்.எம்.நவவி உள்ளிட்ட பழைய மாணவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், அலி சாஹிர் மௌலானா, டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

5 comments:

  1. பள்ளிப்பருவத்தில் உள்ளவர்கள் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதட்காக முஸ்லிம் குடும்பங்களின் நிலை இப்படித்தான் என்று முடிவெடுக்க முடியாது. பெரியவர்கள் சிந்திக்கவேண்டும்.

    ReplyDelete
  2. முஸ்லிம் மாணவர்கள் மட்டுமல்ல பெரும்பான்மை அல்லாத எந்த மாணவர்களிடம் கேட்டாலும் இதையே தான் சொல்வார்கள். காரணம் முன்னைய அரசின் கெடுபிடிகளும் அட்டூளியங்களும் இளையோரை ஆயுத கலாச்சாரத்திற்குள் சிக்க வைக்க நடாத்திய சதிவலைகளுமாகும்.
    முஸ்லிம் பெண்களின் சுதந்திரம் மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும் என்றும், அவர்கள் மாற்று மத மங்கையர் போலல்லாது, அவர்களது மார்க்கத்திற்குட்பட்டு நடப்பதே முஸ்லிம் பெண்களின் தனித்துவமான சிறப்பு என்றும் ஒரு பேராசிரியராக அவர்களுக்கு அறிவுரை கூறி இருக்க வேண்டும். இது கூட பேராசிரியரான உங்களுக்கு இன்னும் புரியாமலிருக்கின்றதே? நீங்கள் எப்படி ஐக்கியமான மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும்?

    ReplyDelete
  3. பேராசிரியரின் கருத்தை உன்னிப்பாகக் கவனித்தால் அவர் கூறும் கருத்தை தனது சொந்த அனுபவத்தையும் எங்கள் சகோதரிகளின் உண்மையான கருத்தையும் தான் ஆதாரமாகக் காட்டினார். எங்கள் வீடுகளில் பெண்கள் சமைப்பதையும் வீட்டு வேலைகளை மும்முரமாகக் கவனிப்பதும் தவிர்த்து குடும்ப அங்கத்தவர்களுக்கு குறிப்பாக அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் ஈடுபடக்கூடிய ஏதாவது பொழுது போக்குகள், பிரயோசனமாக நிகழ்வுகள் நடைபெறுகின்றனவா? ஒரு சில இயக்கங்கள் அந்தப் பெயரால் புத்தக வாசிப்புக்களை குடும்ப அங்கத்தவர்களுக்கு மத்தியில் நடாத்தி நாங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக இறுமாப்பு அடிக்கலாம். பேராசிரியரின் கருத்தில் மிகவும் ஆழமான உண்மை இருக்கின்றது. அதைவிளங்கி முதலி்ல் எங்கள் குடும்பங்களில் இணக்கத்தையும் சுதந்திரம்,மகிழ்ச்சியை ஏற்படுத்த விழைவோம்.

    ReplyDelete
  4. 'நம்மைக் குறைகூறுவதற்கு இவர் யார்?' எனும் விரோதமான பார்வையில் அணுகாமல் நமது பக்கமுள்ள குறைபாடுகளைப் புரிந்துகொண்டு அவற்றைக் களையும் வண்ணம் செயலாற்றுவதே விவேகமானது.

    அதைவிடுத்து அவர்கள் மீது விரோதம் கொண்டு 'ஆ! இப்படியா சொன்னாய்.. இரு உனக்கு கட்டுகின்றேன் மருந்து!' என்ற தோரணையில் கருத்துக்கூற விழைந்தால் அது நிச்சயம் அறிவுபூர்வமானதாகவோ யதார்த்தபூர்வமாகவோ இருக்காது.

    ReplyDelete
  5. ஒரு உண்மையை இங்கு விளங்க வேண்டும் எமது முஸ்லிம் சமூகத்தில் 100க்கு 15% இவ்வாறான சுதந்திரம் என்ற பெயரில் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போடும் சமூகம் இருக்கிறார்கள் மற்றும் பேராசிரியர் என்ற பெயரில் உண்மையும், எதார்த்தமும் புரியாத பேராசிரியருக்கு நாம் சுற்றிக் காட்ட விரும்புவது எப்பவும் ஒரு விஷயத்தை மதிப்பிடும் போது பெரும்பான்மையை வைத்துத்தான் கணிப்பிட வேண்டும் இது சாதாரண மனிதனுக்கும் புர்யும் விடயம் அப்படி இருக்க 85% மாணவர்களின் கருத்தை புரிவதை விட்டு விட்டு 15% காட்டி ஒரு சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவது ஒரு அறிவுடையோருக்கு பொருத்தம் இல்லை ஆனால் நாங்கள் உங்கள் கருத்தில் இருந்து பெருமிதம் அடைகிறோம் ஏன் தெரியுமா? 85% னோர் கட்டுக் கோப்பான, சரியான வழி காட்டலின் அடிப்படையில் வாழ்கிறோம் என்பதனால்
    MMMRAFEEK

    ReplyDelete

Powered by Blogger.