Header Ads



மகிந்த பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை கண்டுபிடிக்க, இந்தியா சென்றுள்ள அதிகாரிகள் குழு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பது குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்காக சிறிலங்கா அதிகாரிகள் இந்தியா சென்றுள்ளனர்.

நிதிமோசடி விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரிகளும், சட்டவாளர்களும். தற்போது இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், இவர்கள், அங்கு ஆலோசனைகளைப் பெறுவதுடன், மகிந்த ராஜபக்ச இந்தியாவில் மேற்கொண்ட வர்த்தக இணக்கப்பாடுகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் நிதிமோசடி விசாரணைப்பிரிவின் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியலங்கார, குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.