யார் இந்த அஜர் பாய் (வீடியோ)
'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்'
'சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதில்லை. அதோடு அன்பாக பரிமாறுகிறார்கள்'
'சாதி மதம் பார்க்காமல் தினமும் 100 லிருந்து 150 பேருக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுகிறார் அஜர் பாய்'
மக்கள் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக் கொள்வதையே நாம் மேலே பார்த்தது.
அமிதாப்பச்சன்:
நம் முன் அமர்ந்திருக்கும் அஜர் பாய் தினமும் 200 பேருக்கு ஹைதராபாத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் உள்ள பகுதியில் மதிய உணவு இலவசமாக கொடுத்து வருகிறார். அஜர் பாய்! கொஞ்சம் வருகிறீர்களா?
(அஜர் அமிதாப்பை நோக்கி வருகிறார்)
'அஜர் பாய்! உங்களின் அனுபவங்களைச் சொல்லுங்கள். தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்கி வருகிறீர்கள்?
அஜர்: நூறிலிருந்து நூற்று முப்பது பேர் வரை.... (பலத்த கைத் தட்டல்)
அமிதாப் பச்சன்: உங்களின் அனுபவத்தை எங்களிடம் பகிருங்களேன்.
அஜர்: நான்கு வருடம் முன்பு எனது சகோதரனோடு ரயில்வே பகுதி சமீபமாக போய்க் கொண்டிருக்கும் போது டயர் பஞ்சராகி விட்டது. வண்டியை ஓரமாக்கி விட்டு சரி செய்ய காத்திருந்தோம். அப்போது ஒரு ஓரத்தில் ஒரு பெண் ஏதோ உளறிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களிடம் 'இந்த பெண்ணுக்கு என்ன ஆனது' என்று கேட்டேன்.
'இந்த பெண்ணின் மகன் இரண்டு நாளாக இவரைப் பார்க்க வரவில்லை. சாப்பிடாததனால் பசியில் இவ்வாறு அரற்றிக் கொண்டுள்ளார்' என்று சொன்னவர்.
நான் ஆச்சரியம் அடைந்தவனாக 'ஏன்.. நீங்கள் இந்த பெண்ணுக்கு உணவளிக்கக் கூடாதா?' என்று கேட்டேன்.
'எங்களுக்கே உணவு பற்றாமல் இருக்கும் போது இந்த பெண்ணுக்கு நாங்கள் எங்கிருந்து கொடுப்பது?' என்றனர்.
இதைக் கேட்டவுடன் எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடன் பக்கத்தில் இருந்த உணவகத்துக்குச் சென்று உணவு வாங்கி வந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். இந்த நிகழ்வு என் மனத்தை மிகவும் பாதித்தது. நடந்த விபரங்களை என் மனைவியிடம் கூறினேன். அன்று எங்கள் வீட்டில் செய்த சிறிது உணவை எடுத்துக் கொண்டு ரெயில்வே பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கொடுத்தோம். அந்த உணவை பார்த்தவுடன் ஏதோ காணாததைக் கண்டது போல் இரு கைகளால் அள்ளி அள்ளி சாப்பிட்டதைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. என் இளமைக்கால் வாழ்வும் எனது ஞாபகத்துக்கு வந்தது.
அமிதாப் பச்சன்: உங்களின் இளமைக்கால வாழ்வைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? பசியின் கொடுமையை உணர்திருக்கிறீர்களா?
அஜர்: என் தந்தை இறந்த போது எனக்கு நான்கு வயதிருக்கும். என் தாயார் என்னை மிகவும் சிரமத்தில் வளர்த்தார். எனது நானா வீட்டிலிருந்து தினமும் ஒரு வேளை உணவு வரும். அதை வைத்து அனுசரித்து சரி செய்து கொள்வோம். இவ்வளவு வறுமையிலும் என்னை எனது தாயார் வேலைக்கு அனுப்பவில்லை. 'நீ நன்றாக படி' என்று தான் என்னிடம் சொன்னார் (சொல்லும் போது அழுகிறார்) உறவினர் வீட்டில் எங்காவது விருந்துக்கு சொல்லியிருந்தார்கள் என்றால் எட்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவலோடு இருப்பேன். அந்த ஒரு நாளில் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் காத்திருப்பேன். பசி என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை என்னை விட யாரும் சரியாக அறிந்திருக்க முடியாது.
அமிதாப் பச்சன்: இங்கு வந்திருக்கும் உங்கள் தாயாரிடம் பேசுவோம்....
'அம்மா! உங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு முன்பு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டது. இன்று உங்கள் மகன் பல பேருக்கு சாப்பாடு போடுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'
அஜரின் தாயார்: இதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது (நா தழு தழுக்கிறது. அதற்கு மேல் பேச முடியாமல் மைக்கை தருகிறார்.)
#ISLAM #HYDERABATH #HELP
வீடியோ
Post a Comment