Header Ads



தேசியப் பாதுகாப்பு குறித்து மஹிந்த ராஜபக்ஸ, இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் இராணுவ அதிகாரிகளுக்கு வழமையாக வழங்கப்படும் சேவை நீடிப்பு வழங்காது அவர்களை ஓய்வுறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கிய உயர் படையதிகாரிகளே இவ்வாறு ஓய்வுறுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் போது இந்த அதிகாரிகள் பதவியில் இருந்தால் படைத்தரப்பினால் நிறுவன ரீதியான பாதுகாப்பும் பலமும் காணப்படும் எனவும், ஓய்வுறுத்தப்பட்டால் தனித்து விடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்படும் நிலையில் இவ்வாறு உயர் இராணுவ அதிகாரிகளை ஓய்வுறுத்துவது அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நிகரானது என அவர் தெரிவித்துள்ளார்.ஆபத்து நீங்கும் வரையில் இந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்குவதே நன்மை என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தலைமை தாங்கிய உயர் அதிகாரிகள் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்படுவதாகவும், நாள் தோறும் விசாரணைகள் என்ற பெயரில் ஆணைக்குழுக்கள் நீதிமன்றங்களில் அழையவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் குறித்த நபர்களின் நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படும் எனவும், இது குறித்து மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியனவற்றை திருத்துவதாக அரசாங்கம் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் இந்த சட்டங்களில் திருத்தம் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்;டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையே பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் லாபங்களுக்காக இவ்வாறு தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஓர் பிழையான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு வெளிநாட்டு நிதி உதவிகளை பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ முதல் தடவையாக பாராளுமன்றில் உரை

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் முதல் தடவையாக இன்றைய தினமே மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.