அரச ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தும், போராட்டத்துக்கு தயாராவது நியாயமற்றது
அரச ஊழியர்கள் முன்வைக்கும் பல கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுத்தும், தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்குத் தயாராவது நியாயமற்றது.
என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு பாதிப்பாக அமையுமா? என அமைச்சரிடம் வினவியதற்கு, ஒரு நாள் வேலைநிறுத்தம் தானே, அதனை பெரிதுபடுத்த தேவையில்லையென அமைச்சர் பதிலளித்தார்.
Post a Comment