பெளத்த சிங்களமே எமது நாட்டு அடையாளம், அதை பாதுகாப்பது சிங்களவரின் கடமை - மஹிந்த உசுப்பேத்துகிறார்
சர்வதேசத்தின் பணத்திற்காக கட்சியின் கொள்கையை மாற்றிய, காட்டிக்கொடுத்த நபர்களை மன்னித்து சிங்கள கொள்கையை பலப்படுத்த மக்கள் தயாராக உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் ஒரு அணியில் களமிறங்க வேண்டும் என அக்குரஸ்ஸை பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலய திறப்புவிழா நிகழ்வில் உரையாற்றும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிகழ்வில் அவர் மேலும் கூறுகையில்,
நாம் பாதுகாத்த எமது நாட்டையும், வளங்களையும் பொருளாதார கொள்கையையும் ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக சீரழித்துள்ளது. ஆகவே மீண்டும் நாட்டை பாதுகாக்கும் அரசியல் கொள்கையை நிலைநாட்டி நாட்டை காப்பாற்ற வேண்டும். தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு உற்பத்தி என்ற விடயங்களில் நாம் அதிக அக்கறை காட்டி வந்துள்ளோம். எனினும் எமது கட்சியில் இருந்தவர்கள் இப்போது சர்வதேச பணத்திற்காக கட்சியின் கொள்கையை மாற்றியதுடன் காட்டிகொடுப்புகளையும் செய்துள்ளனர்.
எனினும் நாம் மன்னிக்கும் மனநிலை கொண்டவர்கள். எமது சிங்கள கொள்கையும் பெளத்த கோட்பாடும் மன்னிக்கும் மனோநிலையை உருவாக்கியுள்ளது. எனவே கடந்தகால காட்டிக்கொடுப்புகளை மறந்தும் மன்னித்தும் கட்சியை பலப்படுத்த நாம் தயாராக உள்ளோம். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்த நான் தயாராக உள்ளேன். கடந்த காலத்தை போலவே மீண்டும் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்து கட்சியை காப்பாற்ற வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கும் எமது இராணுவத்தினருக்கும் எதிரான அழுத்தங்களை வெற்றிகொண்டு நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் மீண்டும் கைகோர்க்க வேண்டும். இன்று விட்ட தவறை இன்றே நிவர்த்திக்க வேண்டும். காலம் கடந்தால் மீண்டும் நாட்டில் குழப்பங்கள் ஏற்படும். அதன்பின்னர் மீண்டும் ஒரு தலைவர் உருவாக மிகநீண்ட காலம் தேவைப்படும்.
ஆகவே இப்பொது நாம் உருவாக்கிக் கொடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் தக்கவைத்து நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும். அத்தோடு எமது பெளத்த சிங்கள கொள்கையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். பெளத்த சிங்கள கொள்கையே எமது நாட்டின் அடையாளமாகும். அதை பேணிப்பாதுகாக்க வேண்டியது எமது நாட்டில் பிறந்த ஒவ்வொரு சிங்களவரதும் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த மண்ணரின் சுயரூபம் இப்போது வெளியாகி விட்டது.இன்னமும் அவரது விசுவாசிகள் விழிக்கா விட்டால் அவர்களை என்னவென்பது.ஒரு நாட்டின் தலைவராக இருந்தவர் இப்படி வெளிப்படையாக ஒரு இனத்தை மட்டும் தூக்கி வைத்து எப்படி பேசலாம்.இவரிடம் நாட்டை ஒப்படைத்தால் ஏனைய இனங்களின் நிலமை என்னாகும்.இதிலும் ஒரு காமடி என்னவென்றால் நாட்டை பாதுகாக்க சிங்கள பௌத்த மக்களை ஓர் அணியில் ஒன்று சேரட்டாம்.ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தெர்தலிலும் இதைத்தான் சொன்னார் எதிர் பார்த்தது நடக்கவில்லை ஆனால் தொப்பி போட்டவர்கள் சிலர்தான் இன்னமும் இவர் பின்னால் நிற்கின்றனர்.(பரிதாபம்)
ReplyDelete