Header Ads



உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் - வழிகாட்டல் கலந்துரையாடல்கள்

-அபூ நுஹா-

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சீர்திருத்தங்களைத் தற்போது தேர்தல் திணைக்களம் துரிதமாக  மேற்கொண்டு வருகின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது. எனவே 2016ன் மத்தியில் புதிய முறைப்படி 70 து 30 என்ற அடிப்படையில்  தேர்தல் என்பது உறுதி.!

இந்த நிலையில் தேர்தல் திணைக்களம் அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் வருகின்ற ஜனவரி மாதத்துக்குள் அனைத்து திருத்த வேலைகளையும் நிறைவு செய்ய இருப்பதாகவும் திருத்தங்களுக்காக காலக் கெடு கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதியுடன் முற்றுப் பொற்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே திருத்தங்கள் அடங்கிய யோசனைகள் திசம்பர் 11ம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிகளின் ஒன்று கூடலில் முன்வைக்கப்பட இருப்பதகவும் அதனைத் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்ற இறுதி அறிக்கை ஜனவரி 15ம் திகதி உள்ளூராட்சி  அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடம் கையளிக்கப்படட்டு அதன் பின்னர் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெறியிடப்பட இருக்கின்றது.

குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் திருத்தங்கள் என்று எவரும் பெரிதாக ஆர்வம் காட்டி இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரியவருகின்றது.

குறிப்பாக தேர்தல் காலங்களில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றி வாய் கிழியக் கத்துகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது விடயத்தில் சமூகத்தை ஏமாற்றி விட்டது-கைவிரித்து விட்டது! இது பற்றி நாம் முன்பும் பல இடங்களில் சொல்லி இருக்கின்றோம்.

மலையக இந்திய வம்சாவழி சமூகத்தின் சார்பில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன் மலையகத்தில் அவர்கள் 10 க்கும் 15 க்கும் இடைப்பட்ட பிரதேச சபைகளை அந்த சமூகத்திற்கு வென்றெடுப்பதற்கும் பிரதேச சபைகளில் தமது சமூகத்தின் சார்பில் அதிக உறுப்பினர்களை பெற்றெடுப்பதற்கான  வலுவான புள்ளிவிபர மற்றும் வரைபட ஆதாரங்களுடன் சமர்ப்பித்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

ஆனால் நமது அரசியல் தலைமைகள் தேர்தல் முறையில் மாற்றங்கள் நடக்காது என்று சொல்லிச், சொல்லியே இப்போது கோட்டை விட்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் சார்பாக இவர்கள் எந்த முயற்சிகளையும்  மேற் கொள்ள வில்லை என்றுதான் கூற வேண்டும்.
புதிய முறையில் அதிக பாதிப்புக்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது.
எனவே இதனைப் பற்றி இப்போது பேசிக் காலத்தை கடத்துவதை விட தற்போது நடைபெற இருக்கின்ற புதிய தேர்தல் முறையில்; முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல்களை, பிராந்திய மட்டங்களில்  நடத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளைப்  பின் வரும்; அமைப்புக்களுடன் தாம் நடத்தி வருவதாக சகோதரத்துவ ஊடகவியலாளர்கள் ஒன்;றியத்தின் தலைவர் .....நளீர் மற்றும்   தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றத்தின் தலைவர் .....சித்திக் ஆகியோர் தெரிவிக்கின்றார்கள்.

தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம் -ருஊNஊஇ
ஸ்ரீ லங்கா இஸ்லாமியப் பேரவை - ளுடுஐஊஇ
ஐக்கிய சகோதரத்துவக் கூட்டமைப்பு -ருடீயுஇ
கண்டி நகர் பள்ளி வாயில்களின் ஒன்றியம் -முஊஆகுஇ   
சகோதரத்துவ ஊடகவியலாளர்கள் ஒன்றியம் -டீஆகுஇ
கொழும்பு ரிப்போர்ட் இணையம் -ஊசுறுஇ

அவர்கள் கூட்டாக ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் 2016 துவக்கத்தில் இந்தக் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள்.

இது விடயத்தில்  இணைந்து ஒத்துழைக்க  விரும்புகின்ற  அமைப்புக்கள் தனி நபர்கள் பின்வரும் இலக்கங்களுடன்
0771570103
0777275758
0777844844 தொடர்பு கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நுஅயடை:டபநஅச2016ளூபஅயடை.உழஅ


No comments

Powered by Blogger.