மைதானம் அமைக்கும் போர்வையில், மாவனல்லையில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க சதி
-RS.Mahi-
மாவனல்லை, கொழும்பு கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பலகோடி ரூபா பொறுமதியான முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொது மைதானம் அமைக்கும் நோக்குடன் குறித்த இடங்களைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முழுமூச்சாக செயற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த மாகாண சபை உறுப்பினர் மாவனல்லை பிரதேச சபைத் தலைவராக இருக்கும்போது குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். எனினும், அது சாத்தியப்படவில்லை. 5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட குறித்த இடமானது தற்போது வயல்வெளியாகவே உள்ளது.
இதில் பெரும்பான்மை சமூகத்தினருக்குச் சொந்தமான இடங்கள் இருந்தபோதிலும் பொது மைதானத்திட்டம், கொழும்பு கண்டி பிரதான வீதியை தழுவியதாக அதுவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ள பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டத்தில், மஹவத்தை என்ற கிராமத்தைத் தழுவியதாக மைதானத்தளம் அமைக்க பிரதேச சபை பிரதித்தலைவராக இருந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியிருந்தார். எனினும், அப்பகுதிக்குள் பல சிங்கள மக்களது காணிகள் உள்ளடங்குவதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ள குறித்த மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகவும் ஜனவரி மாத இறுதியில் மைதான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, மாவனல்லை நகரில் ஏற்கனவே பொது மைதானம் ஒன்று உள்ளதுடன், மேலும் இரண்டு பிரமாண்டமான மைதானங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இம்மைதானங்களில் பல குறைப்பாடுகள் நிழவும் நிலையில் அவற்றுக்கு தீர்வு வழங்காது புதிய மைதானம் அமைக்கப்படுவதன் உள்நோக்கம் என்ன எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த மைதானம் மஹவத்தை கிராமத்தைத் தழுவி அமைக்கப்பட்டால் அதன்மூலம் முஸ்லிம்களே அதிகமாகப் பயன்பெறுவார்கள். அதனைத் தடுப்பதற்காகவே கொழும்பு கண்டி பிரதான வீதிக்கு அருகில் மைதானத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் மாவனல்லை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளரும், அரசதொழில்முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷீம், உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
அமைச்சர் கபீர் ஹசீம் இதில் கவனம் செலுத்துவது என்பது அர்த்தமில்லாத விடயம். ஏனென்றால் கபீர் ஹசீம் அமைச்சரைப் பொறுத்தவரை மாவனல்லை மக்கள் பெருமைக்காக அவர் பெயரை கூறலாம். முஸ்லிம் பெயரில் ஒரு பவர்புள் அமைச்சர் உள்ளார் என்று. ஆனால் மாவனல்லைக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏதாவது நடக்க வேண்டுமென்டால் ஒரு பெரும்பாண்மை அமைச்சரை நர்டுவது புத்திசாலித்தனம். குறைந்தது அவரது ஜமாஅத்தான கிருங்கதெனியவிற்குஇது வரை என்ன செய்திருக்கிறார் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை.
ReplyDeleteஅதாவுட செனவிரத்ன அமைச்சர் சாகிராவிற்கு ஹிங்குளோயா கிராமத்திற்கு செய்த சேவைகளைப் பார்த்தா இவர் நதிங். அண்மையில் பதுரியா மைதானம் கோலாகலமாக அமைச்சர் கபீர் ஹசீம் இனால் திறந்து வைக்கப்பட்டது. நாம் அறிந்த வகையில் அந்த மைதானத்தின் புணருத்தான வேலைகளுக்கான பணி அதாவுட செனவிரத்த அமைச்சர் அவர்கள் வழங்கிய 30 இலட்சம் ரூபாய்கள் மூலமே ஆரம்பிக்கப்ட்டது. நல்லாட்சியில் 10 இலட்சம் ரூபாய்களை கபீர் ஹசீம் அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
பாவம் மைதானத்தின் திறப்புவிழாவின் போது அதாவுட செனவிரத்தன அமைச்சர் அவர்களை அப்படியே மறந்து விட்டார்கள். கபீர் ஹசிம் அவர்கள் தான் பிறதம அதிதி. நாட்டில் நடக்கும் ஆட்சியே கூட்டாற்சி. திறப்பு விழாவிற்கு செய்நன்றிக்காகவாவது அதாவுட செனவிரத்தன அவர்களையும் அழைத்திருந்தால் ஒன்றும் குறைந்து போகாதே.
அமைச்சா கபீர் ஹசிம் செய்யாத எத்தனையோ சேவைகளை முஸ்லிம் சமுகத்திற்கு செய்த ஒரு மனிதர் அவர். ஆனால் கபீர் ஹசிம் இனைப் பொறுத்தவரை இது வரை எதுவும் செய்யவில்லை. இனியும் எதனையும் செய்யப்போவதில்லை. ஆனால் பெரும்பாண்மை மக்களுக்கு தாராளமாகச் செய்வார். அவரின் ஹசிம் பதனம அமைப்பின் மூலம் பல்வேறு சேவைகளை சிங்கள மக்களுக்கு செய்ததனாலேயே அவரிற்கு அதிகப்படியான வாக்குகளை சிங்கள மக்கள் கடந்த தேர்தலில் அவரிற்கு வழங்கினர். இதில் 1 வீதமாவது மாவனல்லை மக்களுக்கு அல்லது அவரது ஜமாஅத்தான கிருங்கதெனியாவிற்கு இது வரை செய்யவில்லை.
ஒரு தனிமனிதன் அதாவுட செனவிரத்த பின்னால் இருந்து ஹிங்குளோயாவிற்கு செய்த பணிகளை பலர் சேர் சேர் என கபீர் ஹசிம் இன்னால் பின்னால் இருந்து கொண்டு நான் தான் அவர்ட ஆள் நீயல்ல என ஒருத்தருக்கொருத்தர் குழிவெட்டிக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தினால் ஒரு மயிரைக் கூட புடுங்க முடியவில்லையே.
அர்த்தமுள்ள பின்னூட்டம் அன்றிலிருந்து இன்று வரை இது நன்றி கெட்ட சமுதாயமாக தானே உள்ளது. அதை இன்று பெரும்பான்மை மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதன் பிரதிபலனையே பேரினவாத சக்திகளைகொண்டு அனுபவிக்கின்றோம்
DeleteGaays endu ulahathula oru vaarthai illa.artham ennamo theriya
ReplyDeleteRifkan Nawas...
ReplyDeleteநீங்கள் கூறுவது உண்மை தான். mawanella gaays இல் உள்ள இரண்டாவது பகுதி (gaays ) இல் இருந்து ஒரு (a) ஐ நீக்கினால் அர்த்தம் மிகவும் அசிங்கமாக இருக்கும். எனவே Mawanella G ...... தமது பெயரை மாற்றிக் கொள்வது மிக அவசியம்
Kabeer hashim is waste for muslim community. .have commented several times.so better take the matter to some sinhala minister atleast something will happend.
ReplyDeleteThanks for the comment on the "Mawanellagays". We will change the name Insha Allah. But please look for the matter we have given. We need a political leader who works for the society. We need a society who votes for the political leader works for the society. Who ever behind Mr. Kabeer Hashim make him to work for our society. Then only you people can face the society. Becuse Mr. Kabeer Hashim will stay in Ambanpitiya
ReplyDeleteAll will say he is bad he is bad.when election comes u people r voting.try to find a alternative person for mawanella then.He is an MP since 2001.14 years there is no alternative.come on guys...be practical
ReplyDeleteProblem is UNP not putting any alternative muslim for the election. If others stand on slfp which muslim will vote?
Delete