உருவச்சிலைகள் அகற்றப்பட்டநிலையில், காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மீண்டும் திறக்கப்பட்டது
காத்தான்குடியில் மூடப்பட்டிருந்த பூர்வீக நூதனசாலை மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பூர்வீக நூதனசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலையில் சில உருவ பொம்மைகள் (உருவச்சிலைகள்) வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை அகற்றுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஆலோசனை விடுத்திருந்தது.
இதனடிப்படையில் கடந்த ஜுலை மாதம் தொடக்கம் இந்த நூதனசாலை மூடப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த உருவபொம்மைகள் (உருவச்சிலைகள்) தற்போது அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். (எம்.எஸ். நூர்தீன்)
இது என்ன பிரச்சினை என்று புரியவில்லை. நூதனசாலை என்றால், அது வணங்கும் இடம் அல்ல. எகிப்தில் உள்ள நூதனசாலையில் உள்ள மம்மிகளையும் இவர்கள் அகற்ற சொல்வார்களோ?
ReplyDeleteஉருவப்படமும் இஸ்லாத்தில் தடை அல்லவா? அதனையும் நீக்க சொல்ல வேண்டுமே? ஏன் செய்யவில்லை?
பெயர் தாங்கி முஸ்லிம் ஹசன் அவர்களே முதலில் எகிப்த என்ன செய்கிறது என்பதை பார்க்காமல் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதனைப் பாருங்கள் இப்படிதான் அவன் செய்கிறான் இவன் செய்கிறான் என்று நாம் மார்கத்தை மறந்த சமூகமமாக வாழ்கிறோம்
ReplyDeleteமற்றது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மைய சொல்வதென்றால் காத்தான்குடி NTJ தவ்ஹீத் ஜமா அத் அவர்கள் செய்த சமூக விளிர்ப்புனர்வும் விமர்சனமும் தான் இன்றைக்கு இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது நம் சமூகத்தில் பெயர் தாங்கி முஸ்லிம்கள் போல பெயர் வாங்கி முஸ்லிம்கள்தான் நமது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் அவர்கள் இந்த விடயத்தில் காட்டிய அக்கறை எந்தளவுக்கு என்பதை நாடறிந்த உண்மை ஒரு சாதனையாளனை இந்த சாதனைக்கு இவர்தான் காரணம் என்று காட்டா விட்டாலும் செய்யா சாதனைக்கு ஒருத்தனை இவர்தான் சாதனையாளர் என்று காட்டுவது எவ்வளவு மோசமான விடயம் என்பதை இந்த சமூகம் இன்னும் உணர வில்லை