Header Ads



ஐரோப்பிய தலைநகரங்களில், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பல ஐரோப்பிய நகரங்களில் புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்களை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரசல்ஸ் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு எல்லாவிதமான பொதுக் கொண்டாட்டங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

பாரிஸ் நகரில் வாணவேடிக்கை கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

எனினும், பாரிஸின் முக்கிய கொண்டாட்ட இடமான ஷோன்ஸே லீஸே வளாகத்தில் மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மாஸ்கோவில், செஞ்சதுக்கத்துக்குள் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மற்றத் தலைநகரங்களும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாரிஸில் கடந்த மாதம் நடந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பத்தாவது சந்தேகநபர் மீதும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

துருக்கியின் தலைநகர் அன்காராவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.