பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நாடு எது..?
உலகளவில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நாடுகளின் பட்டியலில் சிரியா முதலிடம் பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் பணியாற்றி வருபவர்களுக்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தமது பணியின் காரணமாக 69 செய்தியாளர்கள் பலியாகியுள்ளதாக ஊடகவியாளர்கள் பாதுகாப்பு குழுவான சிபிஜே தெரிவித்துள்ளது.
மேலும் இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிரியா முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டில் 13 ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவாகும்.
சிரியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாகவும். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்கள் காரணமாகவும் செய்தியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பட்டியலில் சிரியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் 9 பேர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் தமது பணியை செய்ததற்காக பிரான்ஸில் மொத்தம் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இராக், பிரேசில், வங்கதேசம், தென் சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு குறைந்தது 5 செய்தியாளர்களாவது கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment