Header Ads



முஸ்லிம் அமைச்சர் என்றவகையில், ஞான­சாரருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது

ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் நீதி­ய­மைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி இன­வாதம் பேசு­ப­வர்­களைத் தண்­டிக்கும் வகை­யி­லான தண்­டனைச் சட்டக் கோவையில் திருத்­தங்­களை விரைவில் மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரி­வித்தார்.  

குர்ஆன் இன நல்­லி­ணக்­கத்­த­துக்குப் பாத­க­மாக இருக்­கி­றது. இன நல்­லி­ணக்­கத்தை இலங்­கையில் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு குர்ஆன் தடை­செய்­யப்­பட வேண்­டு­மென ஞான­சார தேரர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கு பதி­ல­ளிக்­கை­யிலே அமைச்சர் ஹலீம் மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அவர் Viக்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘புனித குர்­ஆனை சரி­யாகப் படிக்­கா­த­தி­னாலே ஞான­சார தேரர் இவ்­வா­றான கருத்­துக்­களைத் தெரி­விக்­கிறார்.

இஸ்லாம் மாத்­தி­ர­மல்ல குர்ஆன் மத்­தி­ர­மல்ல அனைத்து மதங்­களும் மத நூல்­களும் இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் கரு­ணை­யை­யுமே வலி­யு­றுத்­து­கின்­றன. இதனை அறி­யாத தேரர் குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் பற்றி தவ­றான கருத்­துக்­க­ளையும் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் பரப்பி மீண்டும் நாட்டில் இன மோதல்­களைத் தோற்­று­விக்க முயற்­சிக்­கிறார்.

நாட்டில் இன நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மென்றால் இனங்­க­ளுக்கு எதி­ரா­கவும் மதங்­க­ளுக்கு எதி­ரா­கவும் ஏனைய கலா­சா­ரங்­க­ளுக்கு எதி­ரா­கவும் வெறுப்­பான கருத்­துக்­களைப் பரப்­பு­வதும் பேசு­வதும் சட்­டத்தின் மூலம் தடை­செய்­யப்­பட வேண்டும்.

அவ்­வா­றா­ன­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே இன­வாதம் பேசு­ப­வர்­களைத் தண்­டிக்கும் வகையில் சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரு­வ­தற்கு சட்ட மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

அனை­வரும் வர­வேற்கும் இந்தச் சட்ட மூலத்தை பொது­ப­ல­சேனா எதிர்ப்­ப­துடன் மாத்­தி­ர­மல்­லாது இத­னுடன் குர்­ஆ­னையும் சம்­பந்­தப்­ப­டுத்தி கொச்­சைப்­ப­டுத்­து­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முஸ்லிம் சமய விவ­கா­ரத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் ஞான­சார தேரரின் கருத்­து­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை  எடுக்கும் பொறுப்பு எனக்­குள்­ளது.

பெரும்­பான்மை மக்கள் அனை­வரும் குர்­ஆனை வாசிக்க வேண்டும். அப்­போதே குர்ஆன் ஏனைய மதங்­க­ளையும் இனத்­தி­ன­ரையும் எவ்­வாறு கௌர­வப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது அவர்­க­ளுக்குப் புரியும் எடுத்­த­தற்­கெல்லாம் புனித குர்ஆன் மீது கைவைக்கும் ஞான­சார தேரர் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் அவர் நிச்­சயம் தண்­டிக்­கப்­ப­டுவார் என்­பதை அறிந்தே இந்த சட்­டத்­திற்கு எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கிறார். அவ­ரது எதிர்ப்­புக்கு அர­சாங்கம் ஒரு போதும் தலை­சாய்க்க போவ­தில்லை என்றார்.  ARA.Fareel

6 comments:

  1. Janasara is a mentally abnormal man. He does not know how to respect others. He knows only extremism way. My request is to all media, don't publish his/BBS news in the media.

    ReplyDelete
  2. Very trully this Mahendran also now in the list of Jhana Saarar.....Abnormal guys....for them no treatment at all...

    ReplyDelete
  3. Mahendran you may don't know the meaning of "kafir" இறை மறுப்பாளர்கள்.

    If ur Hindu and ur worshipping idols that means u don't even follow ur own religion. Hinduism doesn't tell u to worship idols so does Buddhism.
    Quran clearly states that do "not insult other religious gods hence they will insult Allah unknowingly."
    Allah does not like the wrong doers, transgressors, and people who unjust! Even if he is a Muslim.
    So don't misunderstand it. Just by looking at one word or sentence.

    ReplyDelete
  4. Mahendran Sir, pl learn about Islam not to become a Muslim but to know something! We don't insult you!

    ReplyDelete
  5. If anyone criticizes about the Muslims it has to be answered by Muslims as there are wrong doers in every community.But If anyone criticizes about Allah and his Words HE will definitely answer which no body knows in what form. I pray Hidayath is the best answer.

    ReplyDelete
  6. What is the action you are going to take against BBS Mr.HALEEM?

    ReplyDelete

Powered by Blogger.