Header Ads



ஜனாதிபதியின் தலைமையில் அல்குர்ஆனை, தடைசெய்யும் நிகழ்வு நடக்கமாட்டாது - ஹலீம்

(JM.Hafeez) 

ஒரு சிறிய இனவாதக் குழு குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்த போதும் ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனாவின் ஆட்சியில்  அதற்கு இடம் அளிக்கபட மாட்டாது  எனக்கருதுவதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்ர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். 

கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் (24.12.2015) இடம் பெற்ற தேசிய மீழாத் விழா ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற போது வரவேற்புரை நிகழ்த்தும் போது அவா இதனைத்  தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது நல்லாற்சி ஏற்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் ஒரு சிறிய குழுவினர் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஜனாதிபதியின் தலைமையில் அப்படியான ஒரு நிகழ்வு நடக்க மாட்டாது. அதற்கு ஜனாதிபதி இடம் அளிக்க மாட்டார் எனக் கருதுகிறேன்.

கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஒன்று இருக்கவில்லை. அது நீண்ட காலத்தின் பின் கடந்த நூறுநாள் நல்லாட்சியின் போது என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று அது பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு திணைக்களமாக இருந்தது. அதனை தற்போது ஒரு நல்ல நிலைக்குக கொண்டுவர முடிந்தது. 

அதேநேரம் ஜனவரி 8ம் திகதி ஆட்சி மாற்றத்தை அடுத்து அரசை முன்னெடுத்துச் செல்ல உறுதியான ஒரு பாராளு மன்றம் தேவைப்பட்டது. நடந்து முடிந்த பாராளு மன்றத் தேர்தலில் ஒரு சில ஆசனங்கள் குறைவால் அது தடைப்பட்டது. எனவே நல்லாட்சியில் தேசிய அரசு ஒன்றை அமைக்கும் நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. அப்படியான ஒரு ஜனாதிபதியால் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் சங்கடங்கள் ஏற்படாது  என்றார்.

சர்வ சமயத் தலைவர்களது ஆசிர்வாதத்துடன் இக்கூட்டம் இடம் பெற்றது. தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஜனாதிபதியால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

5 comments:

  1. The Statement of Muslim Leaders can't be like this. .
    Dear minister talk strongly..

    No one has any rights to stop our Kuran.

    Allah will help us

    ReplyDelete
  2. மகிந்தவும் இதே பல்லவிதான் பாடினார். அதென்ன கருதுகிறேன்? ஒரு முக்கியமான பிரச்சினை குர் ஆனை தடை செய்யவேண்டும் என பகிரங்கமாக ஊடகங்களில் அறிக்கை விடும் சந்தர்ப்பத்தில் மு க அமைச்சராக இருக்கும் நீங்கள் கடந்தகால அரசில் ஒட்டியிருந்த முஸ்லிம் பெயர்தாங்கி அமைச்சர்களின் பாணியில் நீங்களும் பயணிக்காதீர்கள். நல்லாட்சியென்றால் கொலைசெய்தவனைக் கூட தண்டனை வழங்காமல் மன்னித்து விடுவீர்கள் போல .

    ReplyDelete
  3. no one can stop.. dear muslim leaders . whts is this.
    be more strong.

    ReplyDelete
  4. appadi andral yarin talamayil nadakkum.....? be strong. stop giving foolish statements

    ReplyDelete
  5. அது என்ன கருது கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.