Header Ads



இஸ்லாத்தை பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக, போராடுவது முஸ்லிம்களின் பணி - அர்துகான்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு முஸ்லிம் உலகுக்கு அழைப்பு விடுக்கிறார் துர்க்கி ஜனாதிபதி அர்துகான்.

-Musthafa Ansar-

"இந்த பயங்கரவாத அமைப்புக்களை முறியடிப்பதற்காக முஸ்லிம்கள் எதுவும் செய்யாவிட்டால் எமது பிராந்தியத்தை இலக்குவைத்து மேட்கொள்ளப்படும் தலையீடுகள் தொடரும்" என்று கூறுகிறார் துர்க்கி ஜனாதிபதி.

முஸ்லிகள் என்ற வகையில் எங்கள் முன்னாள் ஒரு பணி இருக்கிறது, அது தான், இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தாயிஷ், அல் காயிதா, போகோ ஹராம், அல் ஷபாப் போன்ற அமைப்புகளுக்கு எதிராக போராடுவதாகும்.

தமது சமயம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் பயங்கரவாதத்தின் பெயரால் எமது பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடரும்.

கிழக்கு மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சிறியவைப் பயன்படுத்தும் முயற்சியை ரஷ்யா செய்யாமல் இருந்திருந்தால், சிரியா விடயத்தில் வித்தியாசமான கொள்கை பின்பற்றப்பட்டிருக்கும்.

ஈராக்கிலும் சிரியாவிலும் என்ன செய்துகொண்டிருக்கிறது ரஷ்யா? விடை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சர்வதேச சட்டத்துக்கமைய ஒரு தேசத்தின் அரசு அழைத்தால் உங்களுக்கு அங்கு செல்ல முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். 400,000 மக்களைக் கொலை செய்த ஒரு அராஜக ஆட்சிக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டியதில்லை, என்று மேலும் கூறினார் அர்துகான்.

No comments

Powered by Blogger.