Header Ads



ஹிருணிகாவை கைது செய்ய வேண்டும் - கீதா போர்க்கொடி

தெமட்டக்கொடை ஆள்கடத்தலிற்கு உத்தரவிட்டதற்காக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க சிவில் சமூகத்தினர் இந்த விடயத்தில் தங்களது நிலைப்பாடு என்னவென்பதை வெளிப்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதுவரை திருமணமான பெண்ணுடன் உறவு வைத்திருந்த ஆணைகடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவர் உத்தரவிட்ட சம்பவம் எதுவும் நிகழ்ந்ததில்லை,

கடத்தப்பட்ட நபரை தனது அலுவலகத்திற்கு கொண்டு வந்து எச்சரிக்கும் அளவிற்கு ஹிருணிகா செல்வார் என்பதை நம்பமுடியாமல் உள்ளது.

தன்னால் காடையர்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபடமுடியாது என தெரிவித்தே ஹிருணிகா கட்சி மாறினார், ஐக்கிய தேசிய கட்சியினர் ஓரே இரவில் அவரை ஏற்றுக்கொண்டனர்,ரோசி சேனநாயக்காவிற்கு பதில் அவரே கொழும்பில் முக்கிய வேட்பாளராக நிறுத்தப்பட்டார்,

ஐக்கிய தேசிய கட்சி ஹிருணிகாவிவகாரத்தில் தாமதம் இன்றி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும்,வேறு ஓரு நாடாளுமன்ற உறுப்பினரிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தால் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பார்,

முன்னைய யுத்தவெற்றி அரசாங்கத்தின் பெயரிற்கு களங்கம் ஏற்படுத்தியவர்களில் ஹிருணிகாவும் ஓருவர்,அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார், தன்னை சட்டத்தரணி என வர்ணித்த அவர் முன்னைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு, ஜனாதிபதிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், அவர்தற்போது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமைதியாக உள்ளார்.

அவர் யார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளதால் அவரை அரவணைப்பதற்காக பாடுபட்ட கொழும்பு மாவட்டத்தைசேர்ந்தவர்களும் அமைதியாகியுள்ளனர், ஹிருணிகா ஏனையவர்களை குற்றவாளிகள், பாதளஉலகத்தினர் என குறிப்பிடுவார், தற்போது அவரே காட்டுத்தர்பார் ஓன்றை இயக்கிவருவது புலனாகியுள்ளது.

குறிப்பிட்ட ஆள்கடத்தல் அவரின் உத்தரவின்பேரிலேயே இடம்பெற்றுள்ளதால் பொலிஸார் அவரை கைது செய்யவேண்டும், பொலிஸார் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விடயத்தில் பக்கச்சார்பை வெளிப்படுத்த முடியாது, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

3 comments:

  1. என்னமா பொங்கிஎலும்புதுக இந்த அரசியல் கண்மனிகள் இந்த வீராப்பு கடந்த அரசியலில் கானாமல் போனதென்னம்மா?

    ReplyDelete
  2. What ever it is.mahinda is no more

    ReplyDelete

Powered by Blogger.