Header Ads



சுனாமியின் போது சமூக வலைத்தளங்கள் இல்லாததால், முஸ்லிம்களின் சேவைகள் வெளியே தெரியவில்லை - ஜோதி மணி

சுனாமியின் போது நாகப்பட்டிணத்தில் முதல் கட்ட மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கிவர்களில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்தனர். வேன் சர்வீசை அவர்கள் நடத்திக்கொண்டிருந்ததால் ஏராளமான உயிர்களை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. கும்பல் கும்பலாக குவிந்து கிடந்த பிணங்களை அடக்கம் செய்தார்கள்.

அன்று சமூக வலைத்தளங்கள் இல்லாததால் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களின் மகத்தான சேவை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவ்வளவே .

அதைப் பொறுக்க முடியாமல் ஆர்எஸ்எஸ் -ல் சிலர் பொங்குகின்றனர். மக்கள் வீடு இழந்து ,வாழ்வாதாரத்தை இழந்து ,அரசாலும் கைவிடப்பட்டு நிர்கதியாக நிற்கும் நிலையில் இதெல்லாம் ஒரு பிழைப்பா?

இந்து, முஸ்லிம், ஏழை, பணக்காரன், தமிழ், தெலுங்கு, இந்தியர், வெளிநாட்டவர் எல்லா வேறுபாடுகளையும் மழை அடித்துக்கொண்டு போய்விட்டது.எஞ்சி இருப்பது மனிதநேயம் மட்டுமே!

உங்கள் பிரிவினை அரசியலை யாரும் இனி காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை. மழை பலவற்றை அழித்திருக்கிறது.ஆனால் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது.

அதுகூட புரியாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வம்புக்கு இழுப்பதிலிருந்தே இவர்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். நமக்கெல்லாம் நிறைய நிவாரணப் பணிகள் காத்துக்கிடக்கிறது.

இஸ்லாமிய சகோதரர்கள் இந்த அபத்தத்திற்கெல்லாம் பதில்சொல்லி நேரத்தை வீணாக்காமல் தொடர்ந்து சேவையில் ஈடுபடுங்கள்.

- காங்கிரஸ் பிரமுகர் ஜோதி மணி

2 comments:

  1. இந்தியாவில் மாத்திரமல்ல சகோதரியே... இலங்கையிலும் சுனாமியின் போதும், அதன் பின் வந்த யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும், இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் "ரிசாத்" போன்ற எங்கள் அரசியல்வாதிகள் சிலரும் பல வகைகளில் தமிழ் மக்களுக்கு உதவியிருக்கிறோம். ஆனால்... நன்றியுணர்வில் இலங்கை வட, கிழக்குத் தமிழர்களை விட இந்திய தமிழ் மக்களாகிய நீங்கள் மனட்சாட்சிக்கு மதிப்பளித்து உண்மைகளை வெளியே கொண்டுவந்து எங்களை நெகிழச்செய்கிரீர்கள்...

    உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி!!

    ReplyDelete
  2. சகோதரியே நீங்கள் ஒன்றை நன்றாக விளங்கிக்கெள்ள வோண்டும் எங்களுடைய புனித அல் குர்ஆண் எங்களுக்கு அதையே போதனை செய்கிறது அந்த வசனங்கள் பின் வருமாறு,..எவன் ஒருவன் ஒரு மனிதனை வாழ வைக்கிறானே அவன் முழு மனித சமூகத்தையும் வாழ வைத்தவர் போலாவார் எவன் ஒருவன் சக மனிதனை அனியாயமாக கொலை சொய்கிறானோ அவன் மழு மனித சமூகத்தையும் கொலை சொய்தவர் போலாவார்

    ReplyDelete

Powered by Blogger.