Header Ads



ஹிரு தொலைக்காட்சி, முஸ்லிம்களினால் முற்றுகை இடப்படவிருந்ததா..?

-Tw-

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆதாரபூர்வமாக மறுத்துரைத்துள்ளார்.

வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக பாஹியங்கம ஆனந்த தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அத்துடன் மன்னார் பிரதேசத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு அமைச்சர் ரிசாத் விடுத்த சவாலுக்கமைய இன்று இரவு பத்து மணி தொடக்கம் தனியார் தொலைக்காட்சியொன்றில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும், மேற்குறித்த ஆனந்த தேரருக்கும் இடையே நேரடி விவாதம் இடம்பெற்றது.

இதன்போது அரச ஆவணங்கள் மற்றும் நில அளவையியல் திணைக்களத்தின் ஆவணங்களை முன்வைத்து வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குல நிலமேனும் காடழிப்பு மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தார்.

இதனையடுத்து குற்றச்சாட்டை மாற்றிய ஆனந்த தேரர், வில்பத்து வனாந்திரத்தை சுற்றிலும் சிங்களக் குடியிருப்புகளே இருந்ததாகவும், வரலாறு காலம் தொட்டு அப்பிரதேசம் சிங்களவர்களுக்கு உரித்தானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும் ஆங்கிலேயர் காலம் தொட்டு தமிழ், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மன்னாரில் வாழ்ந்து வந்திருப்பது குறித்த ஆதாரங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்வைத்தவுடன் விவாதத்தை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் இனவாத கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர்.

இதனையடுத்து குறித்த தனியார் தொலைக்காட்சியின் முகாமைத்துவத்தை தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் ஆர்.எப். அஷ்ரப் அலீ, பளளுவெவ அபுல்கலாம் ஆசாத், கலாநிதி றியாஸ், உள்ளிட்ட குழுவினர் தங்களது கடுமையான ஆட்சேபணையை தெரிவித்தனர்.

குறித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் நேரடி விவாத நிகழ்ச்சியில் இனியும் ஒரு வார்த்தை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராகவோ, மன்னாரில் அவர்களின் பூர்வீக உரிமைகளுக்கு எதிராகவோ இனவாதக் கருத்துக்களை வெளியிட்டால் நள்ளிரவுக்குள் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் பொதுமக்களால் முற்றுகையிடப்படும் என்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும் வில்பத்து விவகாரம் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் தாம் கட்டமைத்த பாரிய பொய்ப் பிரச்சாரத்தை அமைச்சர் தகர்த்தெறிந்தமை தொடர்பாக கடுமையான ஆத்திரத்துடன் ஆனந்த தேரர் தனது இனவாதக் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அத்துடன் முழுநாட்டினதும் அவதானத்தை ஈர்த்திருந்த ஒரு நேரடி நிகழ்ச்சியில் மன்னார் என்பது சிங்களவர்களுக்கு ஒருபோதும் உரித்தானதாக இருக்கவில்லை என்றும் , அப்பிரதேசம் முழுக்க தமிழ், முஸ்லிம், கிறித்தவர்களின் பாரம்பரிய பூமி என்றும் வலியுறுத்தினார்.

மன்னாரில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மீள்குடியேற இடமின்றி தான் சார்ந்த முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, தமிழ் பேசும் எங்கள் சமூகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்ற கருத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தனது கருத்துக்களை வலியுறுத்திய அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆர்.எப். அஷ்ரப் அலீ , பளளுவெவ அபுல்கலாம் ஆசாத், கலாநிதி றியாஸ், ஆகியோர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, படையினர் வசமுள்ள தமிழ்மக்களின் காணிகள் விடுவிப்பு விவகாரங்களிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதே துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


16 comments:

  1. If anyone watched this program he would have understand that whenever Rishard answered his question they didn't accept rather they asked him a different in order to divert.
    These are their techniques. They answers your question with another question.
    When he was other areas of deforestation even the host was interrupting and saying " are you going to come back to willatthu deforestation in your list"

    ReplyDelete
  2. Sure I watched the programme, Rishard clarified well with evidence. The thero was speaking out of the point.Even though guru tv was supporting them.

    ReplyDelete
  3. இந்த விவாதத்தை நோக்கினால் முற்றிலும் தேரரருக்கு சார்பாகவே இருந்தது.நடுநிலையாக கேள்விகள் தொடுக்கப்படவில்லை.என்றாலும் ரிஷாத் முடிந்தவரை இடைமறித்து கேள்வி கேட்பதற்கு விடாமல் தனது முழு திறமையும் பயன்படுத்தி மூச்சி விடாமல் பேசி தேரரின் கேள்விகளை ஆதரங்களோடு தகர்த்தெறிந்தார்.ஊடகவியலாளரும் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் இடித்துகொண்டிருந்தார்.முள்ளிக்குளம் தவிர்ந்த வேறு எந்த ஊருமே வரை படத்தில் இல்லையென்று கூறுமளவுக்கு இனத்துவேசத்தை கக்கியதையே காணக்கூடியதாக இருந்தது. புத்தளத்தில் ஆங்காங்கே உள்ள மக்களுக்கு ஹிறு டீவி பணம் கொடுத்து பெற்ற வர்ணனையே ஒளி பரப்பியது.புத்தளத்திலும் காணி உண்டு மன்னாரிலும் காணி உண்டு. றிஷாத் தந்தார் என்றெல்லாம் பணம் கொடுத்துபெற்ற வர்ணனையே ஒளிபரப்பியது. மரத்திலிருது விழுந்தவனை மாடு மிதித்தது மாத்திரமன்றி பாம்பும் சீண்டினால் என்னவாகும். ஊடக தர்மத்தை மீறும் இனத்துவேஷ ஹீறு டீவியை ஒரு இஸ்லாமிய நாட்டில் இருந்தால் என்னனவாகும்.
    இதற்கும் கூட ஊடகவியலாலரின் பெயரைக்கூறியே நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும் இதே கதி நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் பிறந்த மண்ணைவிட்டுக்கொடுக்க மாடீர்கல்தனே. தலைவர் ரிஷாதின் ஜானக்கியமான பதில் ராடர்கள் வந்து காதில் விலும்போதேல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக பேச எடுத்த விடயத்தை விட்டு ஊடகவியலாளர் நலுவியதையே அவதானித்தோம்.
    மொத்தத்தில் இவர்கள் வில்பத்து அளிகிறது என்றார்கள்
    விடை கிடைத்தது அது வில்பத்து அல்லவென்று.
    கல்லாறு போறேஸ்ட் என்றார்கள் விடை கிடைத்தது இங்கே வரலாற்று தொன்மை வாய்ந்த ஊர்கள் இருந்தது என்று நிரூபிக்கப்பட்டது.
    முஸ்லிம்கள் இங்கே வசிப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்த்லாக பார்க்கிறார்கள்.இவர்கள் முஸ்லிம்களின் மீள்குடிஏற்றத்தினை திட்டமிட்டே அரங்கேற்றும் இனத்துவேஷ நாடகமே அன்றி சூழல் மீது பாசம் கொண்டவர்கள் அல்ல என்பதனைகூட ஆதரங்களோடு நிரூபிக்க தவறவில்லை.
    வாழ்த்துக்கள் தலைவர் றிஷாத் அவர்களே உங்களின் ஆயுட்காலதினை நீடித்து இன்னும் பல்லாண்டு காலம் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகுரலாக மிளிர அல்லாஹ்வே போதுமானவன்

    ReplyDelete
    Replies
    1. Even I watched the programme. hon.mnister Rishad VS one racist thero and two racist announcer debate. This programme was arranged in HIRU TV because of the need of thero. hon.mnister Rishad was telling he will participate any channel, my opinion was hon.mnister Rishad shouldn't participate to this RACIST HIRU TV
      However in future no any muslims participate for any debate in RACIST HIRU TV.

      Delete
  4. I watched the program. it was so good and well clarified by Mr Rishard with evidence but i can understand hiru tv guys supported to thero. and also interrupted when he answered.

    ReplyDelete
  5. Welcome Mr.Rishad. we are with You Sir. Yes you have done Great Job last night. This program not like 1 and 1 . This like 1 and 4 .. oh the way you punished them 1 Thero and the 3 Media Guys wow Superb. Allah bless you and we pray for your long-lasting life and strong
    Fee Amaanillaah
    Akurana Muslim Janathaawa

    ReplyDelete
  6. Welcome Mr.Rishad. we are with You Sir. Yes you have done Great Job last night. This program not like 1 and 1 . This like 1 and 4 .. oh the way you punished them 1 Thero and the 3 Media Guys wow Superb. Allah bless you and we pray for your long-lasting life and strong
    Fee Amaanillaah
    Akurana Muslim Janathaawa

    ReplyDelete
  7. Masha allah good rishard...you are fight alobe but allah helped.some other so called muslim leaders busy with Christmas. .new year musical shows.

    ReplyDelete
  8. இப்படி ஒரு நேரடி நிகழ்ச்சிக்கு உடன்பட்டதே ஒரு தைரியம்.
    அதிலும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசியிருந்தமை அருமை.
    ஆனால் இனிமேல் இப்படியான இனவாதிகளின் கருத்துக்களுக்கு பதில் வழங்க கூடாது. இப்போது அவர்கள் சிங்கள சமூகத்தில் பெரிய தேசப்பற்றாளர் ஆகிவிட்டனர். அவர்களுக்கு மேலும் மேலும் இனவாதத்தை வளர்க்க இது ஒரு சந்தர்ப்பமாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. @Sajanthan முற்றிலும் உண்மை. ஆனால் இவர் போகாமல் இருந்திருந்தால் தேரர் இதைவிடவும் famous ஆகி இருப்பார்.
      இந்நிகழ்ச்சியை பார்த்த படித்த சிங்கள நண்பர்களுக்குத்தெரியும், இந்த தேரர் பொய்தான் சொல்கிறார் என்று.
      சில நாட்டு பின்தங்கிய இனவிரோத சிங்களவர்கள் எவ்வளவு எடுத்துரைத்தாரலும் தேரர் சொல்வதைத்தான் வேதவாக்காக கருதுவார்கள்.

      Delete
  9. MASHAALLAH,RISHAD BADURDEENUKKU ALLAH MEN MELUM UTCHAHATTHAYUM TANNAMBIKKAIYUM KODUPPANAHA,INAVATHIKAL 4 VARUKKU MUN MIHAVUM THIRAMAYAKA VAATHITTAR.ALHAMDULILLAH.

    ReplyDelete
  10. ஹிரு தொலைக்காட்சியில் மட்டும் தான் நான் விவாதத்திற்கு வருவேன் என தேரர் அடம்பிடித்தது இதற்குத்தான்.

    ReplyDelete
  11. voice விவாதத்திற்கு தேரர் கூப்பிடவில்லை தன்மீது சுமத்தப்படும் குற்றத்திற்காக தான் தேரருடன் விவாதிக்கவும் தயார் என்ரும் 100கோடி இழப்பீடு கேட்டு அரிக்கைவிட்டதும் அமைச்சரே வம்புக்கு இழுப்பவனோடு எல்லாம் சன்டைக்குபோனால் அந்தசன்டைக்கே மவுசில்லை கட்டிப்புரல்வது மட்டுமேமிஞ்சும் வீசும் பந்துகலுக்கெள்ளாம் சிக்சர் அடிக்க நினைத்தால் விக்கட்பறப்பது தெரியாமல் இருக்கும் நான் கிரிக்கட்டை சொல்லவில்லை ரிசாட்டிற்கு பந்துவீசவந்த பரதேசியைபற்ரிதான் சொல்கின்ரேன்

    ReplyDelete
  12. இனி பேசி பிரயோசனமில்லை. வரவேண்டிய பிரச்சனைகளை எதிர்நோக்க தயாராகுவோம்.
    Al Visath. நீங்கள் அழகாக பேசுபவர். தேரரைப்பற்றி சொல்லும்போது கொஞ்சம் காரத்தை குறைத்தால் நல்லம்.
    ஒருவர் முகமூடி அணிந்து ஞானசார்ரைப்பற்றிய Whatsapp video க்கு எதிராக பல வெளிநாட்டு சிங்கள வீர்ர்களின் வீரகாவியங்களை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
    ஆகவே எங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை மறந்து ஒன்றுபட்டு அடுத்த கட்டத்துக்கு தயாரகுவதுதான் சாமர்த்தியம் என நினைக்கிறேன். இனத்துவேசத்தை இனியும் கட்டுப்படுத்துவது கஷ்டம். அதுவிம் Zionistகள் கால்பதித்த பின்பு. எங்களைப்பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்று சேர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாகும்.

    ReplyDelete
  13. the hiru TV hosts are should be ashamed to be journalist. they are dark sport and un professionals. but it didnt workout infront of Mr. Rishad.
    hats off to Mr.Rishad.

    ReplyDelete

Powered by Blogger.