Header Ads



நான் ஒருவனே சுதந்திர கட்சியை, விட்டுச் செல்லாதவன் - மஹிந்த பெருமிதம்

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று ஊருபொக்க பிரதேசத்தில் உள்ள ஹெரகஸ்மண்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை திருத்தி உரிய பாதையில் இட்டுச் செல்வதற்கு ஏற்றவகையில் பலம் வாய்ந்த எதிர்கட்சியின் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சிகள் எவையும் உருவாகும் என்று தன்னால் சொல்ல முடியாது. பிரதான கட்சிகளில் இருந்து ஒதுக்கப்படுபவர்களால் புதிய கட்சிகள் தோன்றினால் அது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.

எதிர்கட்சியில் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசங்கத்தில் இணைய உள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய அவர், தான் ஒருவர் மாத்திரதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுச் செல்லாதவன் என்றும், மற்றையவர்கள் அந்த கட்சியை ஐக்கிய தேசிய கட்சிக்கு சுதந்திர கட்சியை காட்டிக்கொடுத்தவர்கள் எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.

2 comments:

  1. உண்மைதான். எங்குமே துரத்தும் வரை ஒட்டிக்கொண்டிருப்பதுதானே உங்கள் பழக்கம்..?

    ReplyDelete

Powered by Blogger.