Header Ads



ஹிருனிக்கா விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிடவில்லை - பொலிசார் கைது செய்யலாம்

ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா சம்பந்தமாக ஜனாதிபதியோ பிரதமரோ காவற்துறையினருக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரானாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சட்டம் பொதுவானது. இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியங்கள் இருந்தால், காவற்துறையினர் ஹிருனிக்காவை கைது செய்யலாம்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியோ பிரதமரோ தலையிடவில்லை. அத்துடன் ஹிருணிக்கா பிரேமச்சந்தர ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஆளும் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் அவர் சம்பந்தமான பொறுப்பு எமக்குள்ளது.

நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் சட்டத்தை அமுல்படுத்த தேவையான சூழல் தற்போது ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்க காலத்தில் போன்று ஹெலிகப்டரில் ஏற்றி எமக்கும் சிங்கபூருக்கு அனுப்பியிருக்க முடியும். எனினும் நாங்கள் அப்படி செய்யவில்லை.

அதேவேளை நாட்டில் தற்போது வலுவான அரசாங்கம் பதவியில் இருப்பதால், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க எவராலும் சூழ்ச்சிகளை செய்ய முடியாது எனவும் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.