மார்க்கத்தை தமது தனிப்பட்ட நம்பிக்கையாக மாத்திரமன்றி, வாழ்க்கை ஒழுங்காகவும் மாற்றிக் கொண்ட முஹம்மது நபி
மனிதத்துவம் மிகுந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தினை இன்று(24) உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.
மார்க்கத்தை தமது தனிப்பட்ட நம்பிக்கையாக மாத்திரமன்றி வாழ்க்கை ஒழுங்காகவும் மாற்றிக் கொண்ட முஹம்மது நபி மிகவும் சிறப்புமிக்க ஒரு மதத் தலைவராவார். இஸ்லாத்தின் இறுதித்தூதராக முஹம்மது நபியவர்கள் 40 ஆவது வயதில் தெரிவு செய்யப்பட்டார்.
அக்காலத்தில் பிரிந்து வேற்றுமைப்பட்டுக் கிடந்த அரேபியச் சூழலை சகோதரத்துவம்,சமாதானம், தியாகத்தின் அடையாளமாக மாற்றி, உயர் பண்புகள் மிகுந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு நபியவர்கள் மேற்கொண்ட முயற்சியை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தின நிகழ்வை மென்மேலும் பயன்மிக்கதாக மாற்ற முடிவது அனைத்து வகையான தீவிரவாதங்களையும் தோற்கடித்து நபியவர்கள் காட்டித் தந்த அவ்வாறான சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமாகும்.
அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மகிழ்ச்சியான, அர்த்தபூர்வமான மீலாதுன் நபி விழாவாக இது அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இவர்கள் ஆதரிக்கும் இவ்வாறான விழாக்களை அவர் வேண்டாம் என்று சொன்னார் அதனால்தான் அவர் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தார் இதுதான் அவரின் உயர்வுக்கான இரகசியம் இதை,நாம் புரிந்து கொண்டால் செரி
ReplyDeleteசரிதான் ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போதுதான் இவ்வாறான தலைவர்கள் நபிகளாரைப்பற்றி படிக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்து உங்களது புத்தியை பறைசற்றாதிர்கள்.
ReplyDeleteசரிதான் ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போதுதான் இவ்வாறான தலைவர்கள் நபிகளாரைப்பற்றி படிக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்து உங்களது புத்தியை பறைசற்றாதிர்கள்.
ReplyDeleteயாருக்கோ பிரோசனம் என்பதற்காக மார்கத்தில் இல்லாத ஒன்றை செய்வது கூடாது. அது பித்அத் .ரனில் ஐயா வந்து மஹ்ஷரில் பதில் சொல்லபோவதில்லை நாம்தான் பதில் கூறியாக வேண்டும்.
ReplyDeleteநபிகளாரை பற்றி ரனில் குறிப்பிடும் போது எனக்கும் மெய்சிலிர்கின்றது அதற்காக இவர் பேசியதற்காக நபிகளாருக்கு புகழ் இல்லை.
மாற்று மதத்தவர்களுக்காக இஸ்லாத்தை வளைக்க வேன்டிய அவசியமும் இல்லை. அதற்கான முன்மாதிரியும் நம்மிடத்தில் காட்டப்படவுமில்லை, மேற்குறிப்பிட்ட சடங்கு போல்..
Mr,Rafeek mohamed நீங்கள் என்ன சொல்ல வர்ரீங்க இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை நபிகளாரை புகழ்வதற்கு இந்த பித்அத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இவ்வாறானவர்களை வைத்து மக்காவில் நபிகள் (ஸல்)அவர்கள் சமரசம் பேசீயபோது உம்மி மக்தூம்(ரலீ) வந்தது அப்போது நபியவர்கள் நடந்து கொண்ட விதம் அதை அல்லாஹ், கண்டித்து அபச வதவல்லா இறங்கியதை கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்கள் சகோதரரே.
ReplyDelete