Header Ads



சட்டவிரோத இஸ்ரேலுடன், உறவுக்குத் தயாராகும் துருக்கி..!


துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் பலஸ்தீன இஸ்லாமிய போராட்டஅமைப்பான ஹமாஸின் தலைவர் காலித் மிஷாலை ஸ்தன்பூலில் கடந்த சனிக்கிழமை சந்தித்தார். துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த அரசியல் பிளவில் சற்று சுமுக நிலை திரும்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எர்துகானின் அலுவலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பிராந்தியத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதோடு எந்த மேலதிக தகவலும் வெளியிடப்படவில்லை. ஹமாஸ் அமைப்பு காசா பகுதியில் அதிகாரத்தில் உள்ளது.

மறுபுறம் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தைக்கு பின் துருக்கியுடனான உறவில் இயல்புநிலை திரும்புவதற்கான உடன்பாடொன்று எட்டப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தனர். இது தொடர்பிலான இறுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருப்பதோடு, இந்த உடன்பாட்டின் முன்னேற்றம் இன்னும் ஆழமாக இல்லை என்றார்.

இஸ்ரேலின் காசா முற்றுகையை மீறி பயணிக்க முயன்ற மாவி மர்வான் கப்பல் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி 10 துருக்கி செயற்பாட்டாளர்களை கொன்றதை அடுத்தே கடந்த 2010 ஆம் ஆண்டு துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று துருக்கி அழுத்தம் கொடுத்து வருவதோடு அதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் காசா மீதான முற்றுகையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. எனினும் துருக்கியில் ஹமாஸின் செயற்பாட்டை மட்டுப்படுத்துவது தீர்க்கமானது என இஸ்ரேல் கருகிறது. இந்நிலையில் துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் எட்டப்பட்டிருக்கும் ஆரம்பக்கட்ட உடன்பாட்டின்படி, துருக்கியில் வசித்து வரும் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ் தலைவர்களில் ஒருவரான சலேஹ் அல் அரவ்ரிக்கு அங்கு தடைவிதிக்க வேண்டி வரும் என்று இஸ்ரேல் சிரேஷ்ய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. அங்காராவில் ஏற்கனவே இஸ்ரேலிய தூதரகம் இருக்கிறது....

    ReplyDelete
  2. கொஞ்ச நாளைக்கு சதாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு கடாபி.பிறகு உசாமா.அதன் பிறகு முர்ஸீ. பிறகு அர்தூகான்...இப்படித்தான் எமது சமூகம் ஏமாறுகிறது. போலி தலைவர்கள்!!!

    ReplyDelete

Powered by Blogger.