Header Ads



"ஒரு முஸ்லிம், தீவிரவாதியாக இருக்கமுடியாது" பேஸ்புக் நிறுவனருக்கு எர்துகான் ஆதரவு


-Musthafaansar-

FACEBOOK உரிமையாளர் MARK முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை தான் பெரிதும் மதிப்பதாக துர்க்கி ஜனாதிபதி அர்துகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க குடியரசுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான டொனால்ட் TRUMP இன் முஸ்லிம்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை மறுத்து, முஸ்லிம்களுக்கு சார்பாக தனது FACEBOOK பக்கத்தில் பதிந்த செய்தியை தான் பெரிதும் மதிப்பதாக துர்க்கி ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அர்துகான் தனது FACEBOOK செய்தியில் பின்வருமாறு கூறியிருந்தார்.

"நான் பல நிகழ்வுகளிலும் எப்பொழுதும் சொல்வது போல் இஸ்லாம் அமைதியின் மார்க்கம், இஸ்லாத்தின் பெயரில் தமது இலக்குகளை அடைந்துகொள்ள செயற்படும் கொலைகாரக் கூட்டங்கள் தினமும் மக்களைக் கொலை செய்கின்றன, குறிப்பாக முஸ்லிம்களை. தாயிஷ், அல் காயிதா, போகோ ஹராம், அல் ஷபாப் என்று அழைக்கப்பட்டும் இந்த நிழல் அமைப்புக்கள் .இஸ்லாமிய உம்மத்துக்கு எதிரான சதிகளுக்கு சேவகம் புரியும் வெறும் பகடைக்காய்களே, ஒரு தீவிரவாதி முஸ்லிமாக இருக்க முடியாது. ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருக்கவும் முடியாது."

2 comments:

Powered by Blogger.