சவூதிக்கு பணிப்பெண்களை அனுப்புவதை விட, நரகத்துக்கு அனுப்புவது நல்லது -- ஞானசாரர்
சவூதி அரேபியாவின் ஆதிக்கம் எமது நாட்டில் அதிகரித்து வருகிறது. சவூதி அரேபியாவில் சில முக்கிய அடிப்படைவாதக் குழுக்கள் காலூன்றி வருகின்றன.
இலங்கை தற்போது சவூதி அரேபியாவின் கொலனியாக (குடியேற்றம்) மாறியுள்ளது. அதனால் எமது பிள்ளைகளுக்கு நாடொன்று இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதென பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
இன்று நாட்டில் சர்வதேச பாடசாலைகள் அதிகரித்து வருகின்றன. முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கு சர்வதேச பாடசாலைகளே அவசியம் எனக் கருதி 20 சர்வதேச பாடசாலைகளை அமைப்பதற்கு முயற்சியெடுத்து வருகிறார்கள். அமைச்சர் ரிசாத் பதியுதீன் துருக்கிநாட்டின் உதவியுடன் வேறான சர்வதேச பாடசாலையொன்றினை நிறுவியுள்ளார்.
இவ்வாறான சர்வதேச பாடசாலைகள் அந்நாட்டின் பாடத் திட்டத்தின் படியே பாடங்களை நடத்தி அந்நாட்டுக்குத் தேவையானவர்களே உருவாக்கப்படுகிறார்கள். இதனால் எமது தேசிய மொழிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இது சிங்களவர்களுக்குச் சொந்தமான நாடு. இதை அரபு நாட்டின் குடியேற்றமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இதனால் சிங்களவர்களுக்கு அரபு மொழி படிக்க வேண்டியேற்படும். இந்த சர்வதேச பாடசாலைகளில் ஆசிரியைகள் முழுமையாக முகத்தை மறைத்துக் கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதனால் பிள்ளைகளுக்குக் கூட பயம் ஏற்படுகிறது. இவர்களைக் கண்டால் நாய்கள் குரைக்கின்றன. நாய்களுக்குத் தான் அபாயம் தெரிந்துள்ளது.
சவூதியில் கல்லெறிந்து கொலைத் தீர்ப்பு
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சவூதியில் வழங்கப்படவுள்ள கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனைக்கு எதிராக முழு உலகமும் குரல் கொடுக்கிறது. சவூதி அரேபியாவுக்கு இலங்கையிலிருந்து பணிப்பெண்கள் அனுப்பக் கூடாது என்று நாம் எமது சம்மேளனத்தில் வலியுறுத்தியிருந்தோம். சவூதிக்கு பணிப்பெண்களை அனுப்புவதை விட நரகத்துக்கு அனுப்புவது நல்லது. இது அடிமைத் தொழிலாகும். 30 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.
சவூதி அரேபியாவுக்கு இலங்கைப் பெண்களை பணிப்பெண்களாக அனுப்பக்கூடாது என பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா, அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இதனை நாம் வரவேற்கிறோம்.
பணிப்பெண்களாக செல்பவர்களின் இரத்த குரூப்பையும் பெற்றுக் கொள்கிறார்கள். இது பணிப்பெண்களை மாடியிலிருந்து தள்ளிவிட்டு பின்பு அவர்களின் சிறுநீரகங்களை கொள்ளையிட்டுக் கொள்வதற்காகும்.
நாம் முஸ்லிம்களுக்காகவே குரல் கொடுக்கிறோம். றிஸானாவை எம்மால் காப்பாற்ற முடியாமல் போனது. இப்போது கல்லெறிந்து கொல்வதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள மருதானையைச் சேர்ந்த இரு பிள்ளையின் தாயான ஒரு முஸ்லிம் பெண்ணின் விடுதலைக்காகவே குரல் கொடுக்கிறோம்.
இந்தச் சட்டம் கோத்திர முறை சட்டமாகும். இது அந்தக் காலத்துக்கு சரியானதாக இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் இது காட்டு மிராண்டிச் சட்டமாகும்.
ஐ.எஸ். இயக்கம்
எவரும் குர்ஆனை இரவு பகலாக தூக்கம் விழித்து படிக்கத் தேவையில்லை. ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அமுல்படுத்தும் கொடூர தண்டனைகள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளாகும்.
அதனால் இந்த தண்டனைகளை அறிந்து கொண்டால் குர்ஆனை அறிந்து கொண்டதற்கு சமமாகும். இந்தச் சட்டம் எமது நாட்டுக்கும் வந்துள்ளது. எம்மால் குறிப்பிட்ட பணிப்பெண்ணின் நிலைமைக்கு கவலை தெரிவிக்க மாத்திரமே முடியும். வேறேதும் செய்ய முடியாது.
ஐ.எஸ். இயக்கத்துக்கும் இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இத் தொடர்பை சிரியாவில் தாக்குதலில் உயிரிழந்த ஐ.எஸ். போராளியின் தொடர்பு உறுதி செய்கிறது.
கலேவெலையைச் சேர்ந்த அந்த ஐ.எஸ். போராளி ஷரீஆ சட்டத்தை பாகிஸ்தானில் பயின்றார். ஜம்இய்யத்துல் உலமா சபையில் பதவிகள் வகித்திருந்தார். நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
ஆனால் ஜம்இய்யத்துல் உலமா சபை இது பற்றி வாய் திறக்கவில்லை. எதுவும் கூறவில்லை.
தனியான விசாரணைப் பிரிவு தேவை
ஐ.எஸ். , தலிபான், ஜிஹாத், அல் ஷபாப் போன்ற தீவிரவாத அமைப்புகள் பற்றி ஆராய தனியான விசாரணைப் பிரிவொன்றினை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
யா அல்லாஹ் இவனுக்கு முதலில் நேர்வழியைக்காட்டு இல்லை என்றால் இஸ்லாத்திற்கு விரோதமானவர்களை முன்னர் நீ எப்படி அழித்தாயோ அப்படியே இவனையும் நீ எங்கள் கண்முன்னே அழித்துவிடுவாயாக ஆமின்
ReplyDeleteMe too join with you.
ReplyDeleteit's good if they don't send their women to Middle East. Sometimes our brothers think "
ReplyDeleteஅஹ் அவள் சிங்களவல் தானே அவளுக்கு எங்க மார்க்கம் என்று கூறுவோர் நம் மத்தியில் இருக்கிறார்கள். பாவம்களுக்கு உடந்தையாக இருப்பதும் பாவமே. வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர் நிலையங்கள் இப்பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் தெரிந்தும் தனது சுயலாபத்துக்காக இப்பாவத்தை செய்கிறார்கள்.
In a way the agents are Pimping to the Arabs!
appa narahathukku anuppu adhoda marakkama neeyum po
ReplyDeleteEttho moden
ReplyDelete