மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்னைகளில், மேற்கத்திய நாடுகள் தலையிடுகின்றன - விளாடிமிர் புடின்
ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனோகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடந்த போது அவர் பதவி விலகினார்.
இதனால் உக்ரைனில் பிரச்சனை ஏற்பட்ட போது மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது புகார் கூறின.
அதாவது சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க முயல்வதாக குற்றம் சாட்டின, அவ்வாறு எந்தவொரு எண்ணமும் ரஷ்யாவுக்கு இல்லை.
ஆனால் இதனை யாரும் நம்ப தயாராக இல்லை, ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும், ஆனால் ஒருபோதும் அதனை பயன்படுத்தாது.
மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்னைகளில் மேற்கத்திய நாடுகள் தலையிடுகின்றன, தாங்கள் தவறே செய்யாதவர்கள் என நினைக்கின்றன.
தங்களுடைய தவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் காலம் வரும் போது காணாமல் போய்விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Mr Putin. Americas no 1 enemy used to be Cuban president Fidel Castro. CIA tried to assassinate him for 638 times but they couldn't. But now you are the no 1 Politicial leader in their list.
ReplyDeleteUS and its alais were the main reason for the USSR to fall. Everyone knows that Americans has too much interest in the Middle East. They created the war in the Middle East to Sell their weapons and loot the oil. No one wants to open the mouth About it except you.