கோதாபயவின் அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு, ஆட்கடத்தல் முறைப்பாடும் பதிவாகிறது
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின், ஆயுதக் கொள்வனவு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (03) ஆஜரானார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, அவரால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த மனுவை நிராகரித்த ஆணைக்குழு, அது தொடர்பிலான 22 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினையும் வழங்கியிருந்தது.
குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றதோடு, அவருடன் மேலும் 3 கடற்படை உத்தியோகத்தர்களும் ஆணைக்குழுவில் சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2
முன்னிலை சோசலிஷ கட்சியின் செயலாளர் கடத்தப்பட்டமை குறித்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக புதிய வழக்கொன்று பதிவு செய்யப்படவுள்ளதாக முன்னிலை சோசலிஷ கட்சி தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி முன்னிலை சோசலிஷ கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் மற்றும் அக்கட்சியின் உறுப்பினரான திமுது ஆட்டிகல ஆகியோரை கடத்திச் சென்றமையை பகிரங்கமாகவே வார இறுதிநாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது கோத்தபாய தெரிவித்திருந்தார்.
இதனை அடிப்படையாக வைத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னிலை சோசலிஷ கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து முறைபாடு செய்வதற்காக முன்னிலை சோசலிஷ கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான துமிந்த நாகமுவ இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
Post a Comment