சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள், மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்பவர்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து உரிய காலத்தில் நாடு திரும்பாத 402 வெளிநாட்டுப் பிரஜைகள் இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்படடு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த சட்டவிரோதமான முறையில் மத மாற்றத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஸ், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment