"வசிம் தாஜுடீனின் கொலை" பாராளுமன்றத்திற்குள் குழப்பம், முஜுபுர் ரஹுமான் மீது தாக்குதல்
வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உரை நிகழ்த்தியதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையை ஆரம்பித்துள்ளர்.
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சபையில் அமர்ந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்பில் சபையில் உரை நிகழ்த்த கூடாது என எதிர்தரப்பினர் கூச்சலிட்டுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த அதிகாரம் உள்ளதாக பிரதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதனை பொருட்படுத்தாத எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு சபையில் அமளிதுமளியை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்தே, பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபை மீண்டும் ஒத்தி வைப்பு
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் பிரச்சினை வலுப் பெற்ற நிலையில் செங்கோளை பாராளுமன்ற உறுப்பினர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நிலையிலேயே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தனவிற்கும், முஜுபுர் ரஹுமானிற்கும் இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், இது பிரதேச சபையோ அல்லது மாகாண சபையோ கிடையாது, இது பாராளுமன்றம் எனவும், பாராளுமன்றத்தின் கௌரவத்தை காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிலையிலேயே பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் மீது தாக்குதல்
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த, இந்திக அனுருத்த ஆகியோரே இத்தாக்குதலை நடத்தியதாக பாராளுமன்ற செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை அடுத்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஊடக இணைப்பாளரை தொடர்பு கொண்டபோது, பராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு புத்தகங்களால் தாக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து சபையில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். என்றாலும் சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகியதை அடுத்து முஜிபுர் ரஹ்மானுக்கு மீண்டும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Muslim mumeenaha nadanthu konaal ivvalvo pirchanai vandrukathu purigravagaluku purium
ReplyDeleteYou should blame first your leader and unp ministers they are the one supportting previous regime..hiding there criminal activities.
ReplyDelete