சக்கரை + எண்ணெய் உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் நிகழும் மரணங்களில் சுமார் 70 வீதமானவற்றிற்கு தொற்றாத நோய்களே காரணமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றாத நோய்கள் சுகாதாரத் துறைக்குள் காணப்படுகின்ற முக்கிய சவாலாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக்காலத்தில் அதிகளவில் சக்கரை மற்றும் எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை உட்கொள்வதை தவிர்க்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதுதவிர பண்டிகைக்காலத்தை முன்னிட்டு உறவினர் வீடுகளுக்கும், தூர இடங்களுக்கான பயணங்களையும் மேற்கொள்ளும் போது உடல்நலனுக்கு ஏற்ற பழங்கள் போன்ற உகந்த உணவுகளை எடுத்துச் செல்லுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment