Header Ads



ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்

மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி செல்வதற்காக தனது தாயுடன் காட்கோபர் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

அந்த ரெயில் வித்யாவிகார்– குர்லா இடையே சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஓடும் ரெயிலிலேயே பிரசவித்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெட்டியில் இருந்த பெண் பயணிகள் அவருக்கு உதவி செய்தனர்.

குர்லா ரெயில் நிலையம் சென்றதும் இதுபற்றி பயணிகள் மோட்டார்மேனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ரெயில்வே பெண் போலீசார் தாய், குழந்தை இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜவாடி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாய், சேய் இருவரும் அங்கு நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

1 comment:

Powered by Blogger.