Header Ads



வெள்ளத்தினால் பாதிகப்பட்டவர்களுக்காக, முஸ்லிம் சகோதரி செய்த தியாகம்...!

முஸ்லிம் சகோதரியின் தியாகம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவி வழங்குவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நிதி வசூல் செய்யப்படுகிறது.

அதனை முன்னிட்டு தென்காசியில் TNTJ சகோதரர்கள் வீடு வீடாக சென்று வசூல் செய்த போது ஒரு சகோதரி தனது தங்க நகையை நிவாரண உதவியாக வழங்கினார்.

சென்னையில் ஆண்களை போல் முஸ்லிம் பெண்களும் வீடுகளில் உணவு தயாரித்து ஆயிரக்கணக்கான பொட்டலங்கள் போட்டு வீடு வீடாக சென்று ஆண்களுக்கு நிகராக விநியோகம் செய்ததை பார்த்தோம்,

முஸ்லிம்களை பொறுத்தவரை மனிதநேய உதவி செய்வதிலும், போராட்டக்களத்தில் நின்று உரிமையை வென்றெடுப்பதிலும், தியாகம் செய்வதிலும் இஸ்லாமிய பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களல்ல...

யார் உருவாக்கிய சமுதாயம்..?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயம் ஆச்சே....!


குறிப்பு : இப்போது இந்த பதிவு அவசியம் தானா என்று நினைக்கக்கூடிய சகோதரர்களுக்கு...முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் தான் என்று பிற மக்களின் மனதில் ஊடகங்கள் பதிந்து வைத்துள்ளன. அந்த மக்களுக்கு எங்களின் மனிதாபிமானத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.


2 comments:

  1. தகுந்த தருணம்தான்

    ReplyDelete
  2. Photos podaadhthatku nandri. Kankukmichcham peeththina thakunda padil adi kodukkappadum.

    ReplyDelete

Powered by Blogger.