எர்டோகனை அவமதிக்கும் வகையில் பேசியதாக, விளாடிமிர் புதின் மீது குற்ற வழக்கு
துருக்கி ஜனாதிபதியான எர்டோகனை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புதின் மீது துருக்கியில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய நாட்டின் போர் விமானத்தை துருக்கி ராணுவம் வீழ்த்திய நாளில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே பகைமை அதிகரித்து வருவது அண்மையில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
போர் விமானத்தை வீழ்த்தியதற்கு மன்னிப்பு கோர மறுத்த துருக்கி மீது ரஷ்யா பொருளாதார தடை விதித்தது துருக்கியை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், ‘ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் லொறிகளை துருக்கி அரசு அதிகாரிகளின் உதவியுன் அந்நாட்டிற்கு கடத்தப்படுவதாக’ விளாடிமிர் புதின் அதிரடியாக குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த கடத்தல் பணியில் துருக்கி ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் ஈடுப்பட்டு வருவதாக கூறிய விளாடிமிர் புதின், அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுருந்தார்.
விளாடிமிர் புதினின் இந்த குற்றச்சாட்டால் ஆத்திரம் அடைந்த துருக்கி ஜனாதிபதி, ‘தன் மீதான குற்றச்சாட்டை விளாடிமிர் புதின் நிரூபித்தால், உடனடியாக ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக’ உடனடியாக கூறியிருந்தார்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே பகைமை அதிகரித்து வரும் நிலையில், துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு போராளி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் ரஷ்ய ஜனாதிபதி மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டையும், அதன் ஜனாதிபதியையும் அவமதிக்கும் வகையில் பேசிய விளாடிமிர் புதின் மற்றும் ரஷ்ய நாட்டு பாதுகாப்பு துறையின் இணை அமைச்சரான Anotoly Antonov மீதும் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளார்.
துருக்கியின் அங்காரா நகரில் உள்ள பொது விசாரணை அதிகாரிகளின் அலுவலகத்தில் இந்த குற்ற வழக்கு முறையாக பதியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment