"முஸ்லிம்களின் நன்மைக்காக செயல்படுகிறேன்"
அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறிய குடியரசு கட்சியினை சேர்ந்த டொனால்டு டிரம்ப், தடை விதிப்பது என்ற முடிவு நன்மையானது என என்னுடைய முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் கூறியுள்ளனர் என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறிய அவரது கருத்தை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு, இங்கிலாந்து நாட்டிற்குள் டிரம்ப் நுழைய தடை விதிக்க வேண்டும் என ஆன்லைன் வழியே மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு சி.என்.என். தொலைக்காட்சி சேனலில் வெளியிடப்பட்ட சி.என்.என். டுநைட் நிகழ்ச்சியில் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில், நான் முஸ்லிம்களின் நன்மைக்காக செயல்பட்டு வருகிறேன்.. என்னுடைய முஸ்லிம் நண்பர்களில் பலர் என்னுடன் ஒத்து போகின்றனர். அவர்கள், டொனால்டு, நீங்கள் கொண்டு வந்துள்ள விசயம் புத்திசாலித்தனமிக்கது மற்றும் நன்மையானது என கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா? என கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், நீங்கள் சந்தித்த நபர்களிலேயே இனவாதம் மிக குறைந்த நபர் நான் என கூறியுள்ளார். என்ன நடக்கிறது என்பதை எங்களது பிரதிநிதிகள் அறிந்து கொள்ளும் வரை அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என இந்த வாரத்தில் கோரினார்.
கடந்த வாரம், கலிபோர்னியாவில் முஸ்லிம் தம்பதியினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து அவர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
Howmany Non-muslims have involved in criminal killings inside the country... why not he utters same speech on them and their respective races ?
ReplyDeleteIt is simple...
TILL YOU TURN TO THIR RELIGION, THEY WILL NOT BE HAPPY WITH you "