வாசிம் தாஜூடீன் கொலை தொடர்பான, விசாரணைகளை சீர்குலைக்கும் 'மர்ம சக்தி'
பிரபல றகர் விளையாட்டு வீரர் வாசிம் தாஜூடீன் கொலை தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஒரு மர்மான சக்தி ஈடுபட்டு வருவதாக காவற்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே காவற்துறையினர், தாஜூடீனின் இந்த மர்ம கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்னும் அந்த பதவிகளில் இருப்பதால், கொலை தொடர்பான விசாரணைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தாஜூடீன் உடலின் மாதிரிகள் காணாமல் போனதாக அண்மையில் நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கொலை சம்பந்தமான சந்தேகத்திற்கிடமான தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வதிலும் காவற்துறையினருக்கு எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை.
வசிம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டதா என்ற சந்தேகம் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதால், சகல சிறப்பாய்வு அறிக்கைகளையும் ஆராய்ந்த பின்னரே இறுதி தீர்ப்பை வழங்க முடியும் என கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் கடந்த 10 ஆம் திகதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதென்ன மர்ம சக்தி? பூதமா?
ReplyDeleteராஜபக்ஷ என்று சொல்ல வேண்டியதுதானே?
அரசு கடந்த ஆட்சின் ஊழல் களை காரணம் காட்டியே பதவிக்கு வந்தது ,அதை செய்ய தவறும் பட்சத்தில் இந்த அரசும் மக்களால் நிராகரிக்படலாம்
ReplyDelete