Header Ads



கொழும்பில் நடைபெற்ற அசிங்கம், அம்பாறையில் விளாசித் தள்ளிய மைத்திரி

-மு.இ.உமர் அலி-

நமது நாட்டின் கலாச்சாரத்தினை  பாதுகாக்க வேண்டியது  நம் அனைவரதும் கடமையாகும்,நவீன தொழில்நுட்ப உலகத்திலே  கலாச்சாரத்தினை  பாதுகாப்பது  என்பது இன்று மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது.

பௌத்த அறநெறிப்பாடசாலைகள்  நாடாளிவிய ரீதியில் நடாத்திய போட்டிகளில்  வெற்றி ஈட்டியவர்களுக்கான  சான்றிதழ்களும்  பரிசில்களும்  வழங்கும் நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட  நிகழ்வு இன்று காலை  அம்பாறை டீ எஸ் சேனநாயக தேசிய பாடசாலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  ஜனாதிபது  மைத்திரிபால சிறிசேன   மேற்கண்டவாறு  கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

அண்மையில்  கொழும்பிலே நடைபெற்ற ஒரு வெளிநாட்டு  பாடகர் கலந்துகொண்ட  இசை நிகழ்விற்கு  நுளைவுச்சீட்டுக்கள் ரூபா 5000 ஆயிரத்திலிருந்து  50 000 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இங்கு கலந்துகொண்டவர்களுக்கு அவர்களது நுழைவுச்சீட்டுக்களின் பெறுமதிக்கு ஏற்ப  மதுபானங்கள்  வழங்கப்பட்டன. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இந்த நிகழ்விலே  கலந்து கொண்டனர் , நடனமாடியிருக்கின்றனர். சில பெண்கள் மேடையிலே ஏறி அந்நிய நாட்டு பாடகனை கட்டித்தளுவினர், இன்னும் சிலர் வெட்கமில்லாமல் தமது மார்புக்கச்சுக்களை  கழற்றி அம்மேடையை நோக்கி வீசி எறிந்திருக்கின்றனர். இவர்களுக்கு  இந்த உத்வேகத்தை வழங்கியது அவர்கள்  குடித்த  மதுபான வகைகளேயாகும். வழிகேட்டிலேயே  செல்லுகின்ற இளம் சந்ததிகளை  ஒழுக்கமான பாதையில் நாம் இட்டுச்செல்ல வேண்டும்.

இவ்வாறான நிகழ்சிகளை  ஒழுங்குசெய்தவர்கள்  கண்டிக்கப்படவேண்டியவர்கள். இவ்வாறு விமர்சனம் செய்ததற்காக  என்மீது  பல விமர்சனங்கள்  செய்யப்படலாம். அதற்கெல்லாம் நான் கவலைப்படமாட்டேன், ஏனெனில்  இந்நாட்டின் கலாச்சாரத்தினை  பாதுகாக்கவேண்டியது  ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பாகும்.”

இந்நிகழ்வில் நீதியமைச்சரும்,பௌத்தசாசன  அமைச்சருமான விஜேதாச ராஜபக்ச,அமைச்சர்,தயா கமகே,பிரதி அமைச்சர்களான  அனோமா கமகே,பைசால் காசீம், உட்பட இன்னும்பலர் கலந்து கொண்டனர்.

7 comments:

  1. Excellent speech. But the president can implement some criteria to provide the permission for restrict these type of functions

    ReplyDelete
  2. Politicians are the biggest culprits. They either involved in crime or provide shelter to other criminals. Law must be materialized rigorously against these culprits. We have no allegiance to any parliamentarian including the president in srilanka. Their actions contrast to their words. Ignominious Srilankan parliamentarians! Islam is the sole way to rehabilitate them.

    ReplyDelete
  3. மாற்றங்கள் தனி நபர்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் .பல்கலை கழகங்களில் ஆன்மீக பாட நெறி அறிமுகப்படுத்த வேண்டும் .

    ReplyDelete
  4. Where did Nanasaratherer go? He never hears these hateful events?
    Like other monks who speaks against shareea'

    ReplyDelete
  5. One of the minsters who took part in the event is personally
    known to me but I have a problem with Jaffna Muslim that stops
    me writing the truth . Jaffna Muslim sometimes doesn't publish
    truths if the truth will hurt VIPs. You can not expect the truth while discouraging it. Truth is truth and that should be
    respected at all times. Now , I want to comment on My3 speech
    about what happened in that music event but how can I do it
    without going against him because ne is My3 ? You can not have the cake and eat it .

    ReplyDelete
  6. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கை, இந்திய பெண்கள் மார்புக் கச்சை அணியாமல், வேற்று மார்புடனேயே இருந்தனர் என்பதற்கு சான்றாக பழைய கறுப்பு வெள்ளை புகைபப்டங்கள் உள்ளன.

    மாற்றம் என்பதே மாற்றமில்லாத ஒன்று என்பதை நிதர்சனமாகக் காண்கின்றோம்.

    ReplyDelete
  7. Organisers of Enrique Iglesias concert in Sri Lanka should be ‘whipped with toxic stingray tails’ says president

    Imagine if a Muslim leader said this.

    ReplyDelete

Powered by Blogger.