Header Ads



பொது எதிரிகளிடம் இருந்து பாதுகாப்புப்பெற, கட்டாரில் இராணுவ முகாம் அமைக்கும் துருக்கி


பொது எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் உடன்படிக்கையின்படி துருக்கி கட்டாரில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவுள்ளது. துருக்கி மற்றும் கட்டாருக்கு இடையில் 2014ம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கைக்கு துருக்கி பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்தது.

 பொருளாதார வல்லமை கொண்ட இந்த இரு நாடுகளும் எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு அதரவை வெளியிடுவதோடு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. கட்டாரில் நிறுவப்படும் இராணுவ முகாமில் முவாயிரம் தரைப்படையினர் நிலைநிறுத்தப்படுவதாக கட்டாருக்கான துருக்கி தூதுவர் அஹ்மட் டம்ரொக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் துருக்கி முகாம் ஒன்று அமைப்பது இது முதல் முறையாக அமையவுள்ளது. அதேபோன்று விமானம் மற்றும் கடற்படை தளங்களும் அமைக்கப்படவுள்ளன. உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடுகளில் ஒன்றான கட்டாரில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க விமானத்தளம் அமைந்துள்ளது. 
      

No comments

Powered by Blogger.