Header Ads



விடுதலை செய்யப்படும் குற்றவாளிகளை, கண்காணிப்பதற்கு “ஒபரேஷன் டஸ்ட்”

பிணையில் விடுதலை செய்யப்படும் பாரியளவிலான குற்றவாளிகளை கண்காணிப்பதற்கு “ஒபரேஷன் டஸ்ட்” என்ற நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க உள்ளனர்.

கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலையாகும் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் இவ்வாறு கண்காணிக்கப்பட உள்ளனர்.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் மற்றும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு ஆகியன கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

கொழும்பு நகரின் பல இடங்களில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

எந்தவொரு நபரினதும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் குறித்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்க உள்ளனர்.

சந்கேத்திற்கு இடமான வகையில் நபர்கள் செயற்பட்டால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஓர் நடவடிக்கையாக இவ்வாறு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது

No comments

Powered by Blogger.