துருக்கியிலிருந்து போர் விமானங்களை, வாபஸ் பெறுகிறது அமெரிக்கா
துருக்கி விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போர் விமானங்களை திரும்பப் பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
துருக்கி வான் எல்லையைப் பாதுகாப்பதற்காகவும், அந்த நாட்டிலிருந்து சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நிகழ்த்தவும் 12 போர் விமானங்களை துருக்கியின் இன்கிர்லிக் விமான தளத்தில் கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் புதன்கிழமை கூறியதாவது:
துருக்கியில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு எந்தவித சிறப்புக் காரணமும் கிடையாது.
துருக்கியின் வான் எல்லையைப் பாதுகாப்பதிலோ, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரிலோ அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.
Post a Comment