திறைசேரியின் புதிய செயலாளராக ராசீன் சாலி..? பிரதமர் ரணில் அதிரடி
திறைசேரியின் புதிய செயலாளராக பேராசிரியர் ராசீன் சாலி நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நிதி அமைச்சின் பல முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
கௌரவத்திற்குரிய சர்வதேச பொருளியலாளரான சாலி, வர்த்தக சமூகத்தின் மரியாதைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நிறுவனங்களின் மிக முக்கியமான பதவிகளை சாலி வகித்து வருகின்றார்.
லண்டன் பொருளியல் கல்லூரியில் 18 ஆண்டுகளாக விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.
2012ம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் லீ குவான் தேசிய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடயைமாற்றி வருகின்றார்.
ஆசியாவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை சாலி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
BBS will not sleeep now .................
ReplyDelete