ஞானசாரர் குறித்து விசாரணை செய்யுமாறு, முஸ்லிம் கவுன்சில் அவசர கோரிக்கை
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபரை கோரியுள்ளது.
தெஹிவளை, கௌடானை பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை அங்கிகளை மறைத்து வைத்து தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும், சர்வதேச தீவிரவாதிகளுடன் இணைந்து பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முஸ்லிகள் திட்டமிட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டு இருந்தார்.
குறித்த கோரிக்கையை விடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறுபான்மை சமூகங்களை தாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இனவாத பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதாகவே ஞானசார தேரரின் மேற்குறித்த கூற்று மூலம் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
”நீங்கள் அறிந்தது போல பொதுபல சேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களால் ஸ்ரீலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக 540 வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போன்று 511 சம்பவங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் திட்டமிட்ட முறையில் தாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. எனினும் அந்தக் காலத்தில் எந்தவித பொலிஸ் நடவடிக்கைகளும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை.
2015 ஜனவரிக்கு பின்னர் பொலிஸாருக்கு சுதந்திரமான முறையில் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் சமாதானத்தை சீர்குலைக்கும் அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க விரைவான நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
எனவே இது விடயம் தொடர்பாக ஒரு நடுநிலையான விசாரணையை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபரை கோருகிறோம்.
இவ்வாறு அந்தக் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கடிதத்தின் பிரதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Good action
ReplyDeleteஇந்த மக்கு பிக்கு திடிரென இப்படியொரு ஆத்திரமூட்டக்கூடிய விடயத்தை சொன்னதன் நோக்கம் முன்னைய அரசியலை சார்ந்ததாகவும் குழப்பங்கலை ஏற்படுத்தி இப்போதைய அரசை ஆட்டம்கான வைக்கும் விடயமாகவும் இருக்கலாம் எது எப்படியிருப்பினும் பிறபாகரனின் ஆயுதக்கலாச்சாரம் ஏற்பட்டதன் விழைவு இப்படியான குல்லநரித்தனமும் மதமுரன்பாடுகலை தோற்ருவித்து அதை அப்போதைய அரசர்கள் கன்டுகொல்லாமல் விட்டதுமே இன்ருவரை கேள்விக்குரியோடு நிக்கின்ரது இது இவ்வாரு இருக்கும் போது இப்போ முஸ்லிம்கள் மீது இப்படியா கருத்துக்கலையும் சாடல்பேச்சுகலையும் தொடர்ந்து பேசிவரும் இனவாதிகலுக்கு எதிராக இந்த அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்கதவரினால் முஸ்லிம்சமுதாயத்தை கோழைகலாக சித்தரிப்பது போன்ராகிவிடும்
ReplyDelete