மரணமா..? குழந்தையா..? முந்தப்போவது எது..???
கனடா நாட்டில் புற்றுநோயால் மரணம் உறுதிசெய்யப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் ‘இறப்பதற்கு முன் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும்’ என்ற உறுதியுடன் கடுமையான போராட்டங்களை சந்தித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் Breanne Smaaslet (22) என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.
இவர் 18 வயதாக இருந்தபோது ஒருவித எழும்பு புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது 22 வயதாகும் இவர் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் இதுவரை உயிர் பிழைத்துள்ளதே அதிசயம் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.
தற்போது 26 வார கர்ப்பிணியாக உள்ள அந்த பெண்ணிற்கு மரணத்தை விட தனது குழந்தையை பெற்றெடுப்பதையே முதல் சவாலாக கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆடம் என்ற நபர் என்னை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால், எதிர்பாராத ஏற்பட்ட விபத்தில் ஆடம் கடந்த மாதம் உயிரிழந்து விட்டார். நானும் கர்ப்பம் அடைந்துவிட்டேன். மரணத்தின் விளிம்பில் இருந்தாலும் கருவை கலைக்க விரும்பவில்லை.
ஆனால், குழந்தை பிறக்கும் வரை என்னை மரணம் நெருங்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கர்ப்பிணி பெண்ணின் எழும்பில் இருந்த கட்டியை ஏற்கனவே நீக்கினோம். ஆனால், புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியவில்லை.
தற்போது 26 வாரங்கள் நடைபெறும் நிலையில், 27 வாரங்கள் பூர்த்தியானதும் அவருக்கு சிசேரியன் சிகிச்சை முறையில் செயற்கை பிரசவம் செய்வதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் இறுதி நாட்களை எண்ணி வரும் கர்ப்பிணி பெண்ணின் சிகிச்சை தடைப்படாமல் நிகழ தன்னார்வ நபர்கள் இதுவரை 5,000 டொலர் வரை நிதி திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment