Header Ads



மேல் மாகாண அமைச்சர் பதவி நீக்கம், ஜனாதிபதியின் சமரச முயற்சி தோல்வி

இதுநாள் வரை தேசிய ஹெல உருமயவின் உறுப்பினர் நிசாந்த சிறி வர்ணசிங்க வகித்த மேல் மாகாண சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து இன்று அவர் நீக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறித்த அமைச்சை தமது அதிகாரத்தின் கீழ் கையகப்படுத்தியதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சுகாதார அமைச்சின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தமையினால் முதலமைச்சர் குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளார். அதனடிப்படையில் , அவர் இன்று மேல் மாகாண ஆளுனர் முன்னிலையில் பதிவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதேவேளை மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு மாகாண சபையின் சில உறுப்பினர்கள் சென்றமையினால் இன்று இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

மாகாண சுகாதார அமைச்சர் தொடர்ந்தும் தனது பதவியை முன்னெடுப்பதற்காக மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், குறித்த உறுப்பினர்கள் இன்று காலை மாகாண முதமைச்சர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.