Header Ads



பிரபாகரன் போன்று அடிப்படைவாத தலைவர், முஸ்லிம்களிடருந்து உருவாக இடமளிக்கமுடியாது - டிலான்

பிரதான இரண்டு கட்சிகளினதும் குறுகிய அரசியல் நோக்கத்தினால் வடக்கு பிரச்சினை பூதாகாரமாகியது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இனியும் அரசியல் குறுகிய லாபங்களின் அடிப்படையில் தொடர்வதனை அனுமதிக்க முடியாது எனவும் அதனை கைவிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் பற்றி பேசினால் தம் மீது சேறு பூசப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தம்மை சிங்களப் புலி என அடையாளப்படுத்தியதாகத் தெரிவி;த்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கத்தின் பிக்குகள் தம்மை மிருகக் காட்சி சாலையில் உள்ள அனைத்து மிருகங்களினதும் பெயர்களைக் கொண்டு அழைத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன்களைப் போன்று அடிப்படைவாத தலைவர்கள் சிங்கள அல்லது முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவாக இடமளிக்கப்பட முடியாது எனவும் அரசியலில் பின்தள்ளி நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. But the heading is saying: Like Prabaharan, can not allowed to be from Muslim community....

    but the story is different as saying; Like Prabaharans, can not allowed to be Singhala or Muslim communities...!!

    So, the heading must be same as in the story...please

    ReplyDelete

Powered by Blogger.