Header Ads



சவூதியில் இலங்கையருக்கு மரண தண்டனையை தடுக்க, உயர்மட்ட பேச்சுக்கள் தீவிரம் - இலங்கைத் தூதுவர்

சவூதி அரேபியாவில் கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக சவூதி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கும், அதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும், அதுகுறித்து கண்காணிப்பதற்குமான சகல உதவிகளையும் பெற்றுக்கொப்பதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட பணிப்பெண்ணுக்கு நேற்று (04) கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்ததாக பரவிய தகவல்கள் குறித்தும் NF சவூதிக்கான இலங்கைத் தூதுவரிடம் வினவியது.

இதனை தாம் நிராகரிப்பதாகவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களே தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டார்.

இதேவேளை, சவூதி அரேபியாவில் கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பணிப்பெண் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று (04) பிரஸ்தாபிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.