'தேனிலவு கொண்டாட்டம்' கணவனை குழப்பிய மனைவி
-tm-
திருமணம் முடித்து தேனிலவை கொண்டாடிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட மனைவி, அந்த தேனிலவு கொண்டாட்டத்தையை குழப்பிய சம்பவமொன்று கொழும்பில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தனியார் நிறுவனமொன்றில் நிறைவேற்று தரத்தில் கடமையாற்றுக்கின்ற திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளர் தரத்தில் கடமையாற்றும் 24 வயதான யுவதியை கரம்பிடித்துள்ளார்.
திருமணம் முடித்து இவ்விருவரும், கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 7ஆம் திகதி அதிகாலை, முதல் மனைவி இன்னும் சிலருடன் இணைந்து அந்த ஹோட்டலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளார்.
ஹோட்டல் மேல் மாடியில் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட திருமணத்தில் தான் கரம்பிடித்தது இரண்டு குழந்தைகளின் தந்தையொருவர் என்பது, அவருடைய முதல் மனைவி,ஹோட்டலுக்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்திய போதாகும் என்று புது மனைவி தெரிவித்துள்ளார்.
Post a Comment