Header Ads



ஜனாதிபதியாக மைத்திரி பொறுப்பேற்றதும், முஸ்லிம் சமூகத்திற்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது - முஜிபூர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலான காலமாக இருந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இதன்போது எத்தனை இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அழிவடைந்தன, எவ்வளவு முஸ்லிம்களின் உடமைகள் சேதமாக்கப்பட்டன என்பது குறித்து நிச்சயம் இல்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றதும், நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் இனவாதிகள் மூலமான தொந்தரவு இன்றி முஸ்லிம்கள் தற்போது நாட்டின் எந்தவொரு மூலைக்கும் செல்லக் கூடியதாக உள்ளது எனவும் முஜிபூர் ரஹ்மான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.