இலங்கையை கவனிக்கத் தொடங்கியது அமெரிக்கா, ரணிலுக்கு தொலைபேசி மூலம் அறிவிப்பு
மிலேனியம் சலெஞ் கோப்பரேசன் (எம்சிசி) யின் உதவிகளை பெறுவதற்கான 2016ம் ஆண்டுக்கான நாடுகளில் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மட்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கருத்திற்கொண்டே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
வாசிங்டனில் இடம்பெற்ற அமைப்பின் பணிப்பாளர்கள் நிலை அமர்வின் போது இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
நேற்று இடம்பெற்ற இந்த அமர்வின் போது இலங்கை தெரிவு செய்யப்பட்டவுடனேயே அது தொடர்பில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்த அமைப்பின் சிரேஸ்ட நிறைவேற்று அலுவலர் டானா ஜெ ஹைட்டினால் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு அமெரிக்கா காங்கிரஸினால் அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி நிறுவகமாக மிலேனியம் சலெஞ் கோப்பரேசன் உருவாக்கப்பட்டது.
இதன் உதவிகள் பெரும்பாலும் நல்லாட்சி, பொருளாதார சுதந்திரம், பொதுமக்களின் முதலீடுகள் என்பவற்றை கருத்திற்கொண்டே வழங்கப்படுகின்றன.
மிலேனியம் சலெஞ் கோப்பரேசனின் பணிப்பாளர்கள் சபையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட்ட யுஎஸ்எய்ட் நிர்வாகி, அமெரிக்க திறைசேரியின் செயலாளர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் பரிந்துரையில் நான்கு தனியார்துறை பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்
Post a Comment