பௌத்தர்களால் நிராகரிக்கப்பட்ட ஞானசாரர், தன் இருப்பைத் தக்கவைக்க முயற்சி
இந்நாடு தேசிய இன ஐக்கியத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் புனித அல் குர்ஆனைத் தடை செய்யும் படி கோருவது இந்நாட்டை மீண்டும் குழப்ப நிலைக்குள் தள்ளி விடுவதற்கான முயற்சியின் வெளிப்பாடாகும். ஆனால் இம்முயற்சி ஒரு போதும் வெற்றி அளிக்கப் போவதில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸூஹைர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் வாழும் பௌத்தம், இந்து. இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் தம் சமூக இன அடையாளங்களுக்கு மேலதிகமாக தேசிய அடையாளத்தை நோக்கி இன்று நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனைக் குழப்பியடிக்கும் முயற்சியாகவே இக்கோரிக்கையை நோக்க வேண்டியுள்ளது. ஆனால் நாட்டின் நலன்களில் அக்கரை கொண்ட சகலரும் இக்கோரிக்கைக்கு கடுகளவேனும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நேற்று 15 ஆம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கு குர்ஆன் தடை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே முன்னாள் எம். பி. ஸூஹைர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, நாட்டில் அச்சம், பீதியின்றி சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழக் கூடிய சூழல் ஜனவரி 08 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த நிம்மதியையும் நாட்டையும் குழப்பும் நோக்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.
கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக உலகில் அமைதி சமாதானத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கும் புனித அல் குர்ஆனை தடை செய்யக் கோருவது அடிமட்ட முட்டாள்தனமாகும். உலகறிந்த பேரறிஞரான மைக்கல் எச். ஹார்ட் உலகில் தோன்றிய அதிசிறந்த நூறு தலைவர்களைத் தேர்ந்தெடுத்து “த ஹன்ரட்“ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் மேற்கத்தைய சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத ஒருவர்.. அப்படியிருந்தும் அந்நூலில் அவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதலிடம் வழங்கியுள்ளார். அதற்கு அவர் குறிப்பிட்டு இருக்கும் காரணங்களில் ஒன்றாக முஹம்மத் (ஸல்) அவர்கள் புனித அல் குர்ஆனின் பிரதிபலிப்பாக விளங்கியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முழு மனித சமூகத்தினதும் இம்மை மறுமை வாழ்வின் விமோசனத்திற்கும் சுபீட்சத்திற்கும் நேர்வழி காட்டக் கூடிய அல் குர்ஆனைத் தடை செய்யக் கோருவது புத்திபேதலித்ததனமேயாகும்.
அதேநேரம் இக்கருத்தின் ஊடாக அவர் தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். அதனால் இவரது கருத்து குறித்து எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த இவர் பௌத்த மக்களாலேயே முழுமையாக நிராகரிக்கப்பட்டவராவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Why Gnanasara started talk about Quran? Who are the people influence him talk about Quran. Who gave pionts talk about Quran?.
ReplyDeleteWow nizar ur a genius! From ur statement it's crystal clear ur trying to target a one specific jamath!
ReplyDeleteFear Allah! There are more people than Gnanasara who talk b.sh't about Quran.
Are you going to say those people also influenced by ur enemy no 1 ?
Y JM makes big headlines for this.
ReplyDelete